• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-17 19:11:06    
சீனத் துணை தலைமையமைச்சரின் கருத்து

cri

பன்னாட்டு சில்லறை விற்பனை குழுமத்தின் மூன்றாம் கொள்வனவு கூட்டம் நேற்று சீனாவின் நங்கின் நகரில் துவங்கியது. சீனத் துணை தலைமையமைச்சர் வூ இ அம்மையார் இக்கூட்டத்துக்கு அனுப்பிய மடலில், பல துறைகளில் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக நல்கி, கிராமப்புறத்தில் வணிகப் பொருள் புழக்கத்தைத் தூண்ட வேண்டும் என்று கோரியுள்ளார். கிராமப்புறத்தில் வணிகப் பொருளின் புழக்கத்தை விரைவுபடுத்துவது, இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. பல பன்னாட்டு கூட்டு நிறுவனங்களும் சீனாவின் உள்நாட்டிலுள்ள பெரிய ரக உற்பத்தி தொழில் நிறுவனங்களும், கிராமப்பறச் சந்தைக்கு ஏற்புடைய உற்பத்திப் பொருட்களை சிறப்பாக வெளிப்படுத்தும். அன்றி, நேரடியாக கொள்வனவு செய்யப்படும் வேளாண் உற்பத்திப் பொருட்களின் இனங்களையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். கிராமப்புற வணிகப் பொருட்களின் புழக்கத்தை மேலும் தூண்டி விடுவதற்கு இப்புதிய நடவடிக்கைகள் சாதகமாக இருக்கும் என்று வூ இ அம்மையார் சுட்டிக்காட்டினார். கிராமப்புறத்துக்கு "நன்மை, வசதி, பாதுகாப்பு" என்ற நிலையில் நுகர்வை வழங்கும் வகையில், அங்கு நவீன புழக்க வலைப்பின்னலை அமைக்கச் சீனா பாடுபட்டு வருவதாக, சீன வணிக அமைச்சரின் உதவியாளர் Huang Hai தெரிவித்தார்.