|
உலக பொருள் போக்குவரத்து தொழில் நிறுவனங்களின் அலுவல் வளர்ச்சிக்கான முதல் இடமாக மாறிய சீனா
cri
|
உலகில் 53 விழுக்காட்டு தொழில் நிறுவனங்கள் சீனாவில் பொருள் போக்குவரத்து அலுவலை விரிவாக்க விரும்புகின்றன. உலக பொருள் போக்குவரத்து தொழில் நிறுவனங்களின் அலுவல் வளர்ச்சிக்கான முதலாவது நாடாக சீனா மாறியுள்ளது என்று அமெரிக்க CSCMP என்னும் மன்றம் வழங்கிய ஒரு அறிக்கை காட்டுகின்றது. உலகின் வெவ்வேறான இடங்களில் 15 ஆயிரம் உறுப்புகளை கொண்ட இம்மன்றம், சீனாவின் தியன் ச்சிங் நகரில் அதன் 2007ம் ஆண்டு கூட்டத்தை நடத்தும். அதன் பல தொழில் நிறுவனங்கள், சீனாவின் பொருள் போக்குவரத்து தொழில் மீது பேரக்கறை கொண்டுள்ளன. மென்மேலும் அதிகமாகி வரும் அந்நிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி செய்து, சீனாவிலேயே விற்பனை செய்கின்றன. சீனாவின் கிடங்கு சேமிப்புக்கும் பொருள் போக்குவரத்து துறைக்கும் இது, மேலதிக வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. 2007ம் ஆண்டில், சீன சமூக பொருள் போக்குவரத்தின் மொத்த மதிப்பு 73 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவான் ஆகி விடும். 2006ம் ஆண்டில் இருந்ததை விட இது சுமார் 23 விழுக்காடு அதிகமாகும் என்று சீன அறிவியல் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று காட்டுகின்றது.
|
|