இவ்வாண்டின் இறுதி வரை, "Yu Lu திட்டம்" என்னும் சமூகத் திட்டப்பணியில், பயிற்சி மூலம் வறிய கிராமங்களில், 38 லட்சம் விவசாயிகள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற, "Yu Lu திட்டத்தின்" சாதனை பற்றிய கண்காட்சியில் இது அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் இறுதி வரை, இத்திட்டத்தின் மூலம், 90 விழுக்காட்டுக்கு அதிகமான கிராம உழைப்பாளர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். "Yu Lu திட்டம் என்பது, அரசின் தலைமையில், பல்வேறு சமூகத் துறையினர் பங்கெடுப்பதுடன், வறியவர்களுக்கு பல்வகை பயிற்சிகளை வழங்குவதன் மூலம், அவர்கள், வேலை வாய்ப்பை பெற்று, தொழில் நடத்துவதைத் தூண்டும் சமூகத் திட்டப்பணியாகும். 2006ஆம் ஆண்டு இத்திட்டம் துவங்கியது. வறிய பிரதேசங்களின் இளம் விவசாயிகள் வேலை வாய்ப்பு பெறுவதிலும், தொழில் நடத்துவதிலும் சந்திக்கும் இன்னல்களைத் தீர்த்து, உற்பத்தியை வளர்த்து, வருமானத்தை அதிகரித்து, வறிய பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான குறிக்கோளை இறுதியில் நனவாக்க இத்திட்டம் உதவும்.
|