சீன அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள Chong Qing மாநகர் நிறுவப்பட்ட 10வது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, இன்று கொண்டாட்டக்கூட்டம் இந்நகரில் நடைபெற்றது. சீனத் துணை தலைமையமைச்சர் Hui Liang Yu, இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மேற்கு பகுதியில் முக்கிய பொருளாதார அதிகரிப்பு துருவமாகவும், யாங் சி ஆற்றின் மேல்பகுதியின் பொருளாதார மையமாகவும், நகர்களும் கிராமங்களும் ஒருங்கிணைப்பாக வளரும், அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகராகவும் Chong Qing விரைவாக மாற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் அரசவையின் சார்பில், Chong Qing மாநகர் நிறுவப்பட்டதன் 10வது ஆண்டு நிறைவுக்கு Hui Liang Yu வாழ்த்து தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகால முயற்சியுடன், Chong Qing மாநகரில், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம் உள்ளிட்ட பல்வகை லட்சியங்கள், மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளன என்று அவர் கூறினார். Chong Qing, மைய நகராக, தூண்டுதல் பங்கை மேலும் செவ்வனே ஆற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். Chong Qing, தென் மேற்குச் சீனாவில் அமைந்துள்ளது. 1997ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 18ஆம் நாள், சீன அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள Chong Qing மாநகர் நிறுவப்பட்டது. சுமார் 80 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய இம்மாநகரின் மக்கள் தொகை, 3 கோடியே 20 லட்சமாகும். சீன அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகர்களில், Chong Qing மாநகர் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
|