2010ம் ஆண்டு வரை சீனாவின் அனைத்து வட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் அகன்ற அலைவரிசை சேவை துவங்கப்படும் என்று எமது செய்தியாளர் நேற்று சீனத் தகவல் தொழில் வாரியத்திலிருந்து அறிவித்துள்ளார். புதிய தரவின் படி, தற்போது சீனாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 14 கோடியே 40 லட்சத்தை எட்டியுள்ளது. அவற்றில் 9 கோடியே 70 லட்சம் பேர், அகன்ற அலைவரிசை சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால், சமனற்ற பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியினால், கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலும், பெரும் இடைவெளி நிலவுகின்றது. கடந்த ஆண்டின் இறுதி வரை, நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 20.2 விழுக்காட்டினரும் கிராமங்களில் 3.1 விழுக்காட்டினரும் இணையம் பயன்படுத்துகின்றனர். நகரங்களுக்கும் வட்டங்களுக்குமிடையேயுள்ள தகவல் இடைவெளி குறைக்கப்பட வேண்டும். இனிமேல், கிராமப்புறத்தில் அகன்ற அலைவரிசை சேவை விரைவுபடுத்தப்படும். அதே வேளையில், தகவல் பாதுகாப்புக்கான உத்தரவாத முறைமை மேலும் முறையாக்கப்படும்.
|