க்ளீட்டஸ் -- அன்புள்ள நேயர்களே, கடந்த நிகழ்ச்சியின் இறுதியில் சொன்னது போல, இன்று நாங்கள் ஒரு சிறப்பு கோழி உணவு வகையின் தயாரிப்பை அறிமுகப்படுத்துகின்றோம். தேவையான பொருட்கள் தயாரா?
வாணி -- பரவாயில்லை. நான் மீண்டும் ஒரு முறை சொல்வேன்?
கோழி இறக்கைகள் அரை கிலோ
காடி 15 கிராம்
சோயா சாஸ் 10 கிராம்
உப்பு தேவையான அளவு
சமையல் மது 10 கிராம்
Coca cola சுமார் அரை லிட்டர்
க்ளீட்டஸ் -- இன்றைய உணவு வகையில் ஒரு சிறப்பு பொருள் சேர்க்கப்படுவதைக் கண்டுப்பிடித்துள்ளேன். அதாவது கோக் தானே.
வாணி -- ஆமாம். இது ஒரு பாரம்பரிய உணவு வகை அல்ல. சமைக்க விரும்பும் இளைஞர்கள் கண்டுப்பிடித்துள்ள புதிய வகை தயாரிப்பு இது. நீங்கள் பெப்சியையும் பயன்படுத்தலாம்.
க்ளீட்டஸ் -- முதல் செய்முறையை நான் அறிமுகப்படுத்துகின்றேன். சந்தையிலிருந்து வாங்கிய கோழி இறக்கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து, அடுப்பின் மீது, வாணலியில் நீரை ஊற்றி சூடுபடுத்துங்கள். பிறகு, கோழி இறக்கைகளை வென்னீரில் போட்டு, வேக வையுங்கள். கோழி இறைச்சியின் பச்சை வாசனையைநீக்குவது இதன் நோக்கமாகும்.
வாணி -- ஒரிரு நிமிடங்களுக்குப் பிறகு, கோழி இறக்கைகளை நீரிலிருந்து வெளியே எடுக்கலாம். கோழி இறக்கைகளின் 2 பக்கத்திலும் கத்தியால் கீறவும். காடி, சோயா சாஸ், உப்பு சமையல் மது முதலியவற்றை கோழி இறக்கைகளுடன் கலந்து 40 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இப்படி செய்தால், பல்வேறு மசாலாக்களின் சுவை கோழி இறைச்சிக்குள் நன்றாக சோரும். அனைவரும் அறிந்தபடி கோக் மிகவும் இனிப்பானது. ஆகையால், இந்த வறுவலைத் தயாரிக்கும் போது, சர்க்கரை தேவையில்லை.
40 நிமிடங்களுக்குப் பிறகு, வாணலியை அடுப்பின் மீது வைத்து, சிறிதளவு உணவு எண்ணெயை ஊற்றி, கோழி இறக்கைகளை நன்றாக வறுக்கவும். கோழி இறக்கைகளின் நிறம் மாறிய பின், கோக்கை வாணலியில் ஊற்றலாம். கோழி இறக்கைகள் முழுவதையும் மூழ்கும் அளவு தேவையான அளவாகும். பெரிய சூட்டில் நன்றாக வேகவைத்த பின், சூட்டை குறைக்கலாம்.
க்ளீட்டஸ் -- கடைசியில், வாணலியிலுள்ள திரவப்பொருள் மெதுமெதுவாக குறைத்திருக்கும். நீங்கள் தற்போது வாணலியிலுல்ள கோழி இறக்கைகளை நன்றாக கிளற வேண்டும். படிப்படியாக broth காணாமல் போயிற்று. சுவையான கோழி இறக்கை வறுவல் தயார்.
வாணி -- மீண்டும் இந்த உணவைத் தாயாரிப்பதில் கவனத்துக்குரிய சிலவற்றைக் கூறுகின்றேன். கோழி இறக்கையின் 2 பக்கங்களையும் கத்தியால் கீறி, மலாசாக்களுடன் கலந்து 40 நிமிடங்கள் வைக்க வேண்டும். கோக் இனிப்பாக இருக்கும் காரணத்தினால், சர்க்கரை தேவையில்லை. வாணலியில் வேகவிடும் போது, கோக்கின் அளவு கோழி இறக்கைகளை மூழ்கச் செய்ய வேண்டும். தயாரிப்பின் இறுதியில், தீய்ந்து போவதைத் தவிர்க்கும் வகையில், கோழி இறக்கைகளை இடைவிடாமல் கிளற வேண்டும்.
க்ளீட்டஸ் -- சரி, நேயர்களே, நீங்கள் தயாரித்த கோழி இறக்கை வறுவல் சுவையா? கோழி இறைச்சி விரும்பும் நேயர்கள் வீட்டில் தயாரித்து ருசி பார்க்கவும். வாணி -- அடுத்த வாரம். ஒரு வகை பால் வறுவல் பற்றி அறிமுகப்படுத்துவோம். பால் 500 அரை ரீட்டர், கேரட் 10 கிராம், பிரட் மூன்று தூண்டுகள், முட்டை 1, உணவு எண்ணெய் 50 கிராம் முதலியவற்றை தயாராக்கிக் கொள்ளவும்.
|