• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-19 16:43:08    
மெங் ஜியாங் துவும்-சீநப் பெருந்தவரும் தொடர்ச்சி

cri

காலம் கடந்தது. பருவங்கள் மாறின. குளிரில் கணவன் நடுங்குவானே எனக் கலங்கி, அவனுக்காக பஞ்சு திணிக்கப்பட்ட கோட் ஒன்றைத் தைத்து எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். பல நாட்கள் நடந்து, இன்னல்கள் பல கடந்து, பெருஞ்சுவர் கட்டப்பட்ட இடத்தை அடைந்தாள். ஏராளமான தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய செங்கற்களை குறுகிய மலைப்பாதை வழியே எடுத்துச் செல்வதைக் கண்டாள் கைதவறி ஒரு செங்கலை கீழே போட்டாலும், அந்தச் செங்கலோடு அந்தத் தொழிலாளரும் கீழே தள்ளப்படுவார் என்று மன்னன் விதித்திருந்தான். கட்டுமானப் பொருள் வீணாகக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு, பொ ஹாய் கடலோரமாக உள்ள ஜியாவ் ஷான் மலையடிவாரத்தில் போய்பார்க்கச் சொல்லி அதிகாரி சொன்னான். அங்கே போனபோது, அவளுடைய கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், "மெங் ஜியாங் னு, இவ்வளவு தாமதமாக வந்தாயே, மூன்று நாட்களுக்கு முன்பு தான் உன்கணவன் களைத்துப்போய் உடம்பில் தெம்பு இல்லாமல் இறந்து போனான். அவனுடைய உடம்பை பெருஞ்சுவரின் அடித்தளத்தை நிரப்புவதற்காகப் போட்டு சுவர் எழுப்பி விட்டார்கள்" என்றான்.


அதிர்ந்து போன மெங் மூன்று நாட்கள் இரவும் பகலுமாக ஒப்பாளி வைத்தாள். மூன்றாவது நாளன்று வானம் இருண்டது. வையகத்தை இருள் சூழ்ந்தது. எண்ணூறு லி நீளத்திற்குப் பொருத்த ஓசையுடன் பெருஞ்சுவர் இடிந்து விழுந்தது. அதன் அடியிலே கிடந்த பல சடலங்கள் வெளியே வந்து விழுந்தன. பாதி மரகதக் கொண்டை ஊசியை கையிலே பிடித்த படி கிடந்த தனது கணவனின் சடலத்தை மெங் கண்டாள். அழுது அரற்றியபடியே கண்வனைப் புதைத்து விட்டு, மெல்ல கடலை நோக்கி நடந்தாள்.
"வானகமே! கண் திறந்து ஏழைகளின் அவலத்தைப் பாராயோ! பெருங்கடலே! எங்கள் துயரத்தை கேளாயோ!


சகோதரிகளே! இனி நாம் என்றைக்கு வெளிச்சத்தைக் காணப் போகிறோம்?" என்று புலம்பியபடியே கொந்தளிக்கும் கடலில் குதித்து விட்டாள். அதுவும் அவனை இரக்கமின்றி விழுங்கி விட்டது. அவள் கடலில் குதித்த இடத்தில் இரண்டு பாறைகள் முளைத்தன. அவற்றை மெங் ஜியாங் னுவின் கல்லறை என்கிறார்கள். அவளுடைய ஓலத்தை நினைவுபடுத்தும் வகையில் இன்றைக்கும் நாரைகளும், தொக்குகளும், அந்தப் பாறைகளின் மீதமர்ந்து கதறுகின்றன என்று வழிகாட்டி சொல்லி முடித்த போது,
"சித்திரச் சோலைகளே! உம்மை திருத்த இப்பாரினிலே-முன்பு எத்தனை தோழர்கள் இரத்தம் சிந்தினரோ உங்கள் வேரினிலே" என்ற பாவேந்தர் பாரதிதாசகனின் பாடல் வரிகளை நினைத்துக்கொண்டேன்.