• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-19 17:00:36    
கிராமப்புரத்தில் குடும்ப நலத் திட்டத்தின் பயன்

cri

இந்த இரண்டு அமைப்புமுறைகள் சோதனை முறையில் நடைமுறைக்கு வந்த பிறகு, முழு நாட்டிலும் 13.5 இலட்சம் 60 வயதுடைய முதியோர், குடும்ப நலத் திட்டத்தைப் பின்பற்றியதால், ஆண்டுக்கு குறைந்தது 600 யுவான் பரிசு தொகையை பெறுகின்றனர். மேற்கு பகுதியில் மொத்தம் 3 இலட்சத்துக்கு அதிகமான குடும்பங்கள் குறைவான பிறப்பு வேகமான வளம் என்னும் திட்டப்பணியின் பரிசுத் தொகையை பெற்றனர் என்றார் அவர்.


சோதனை பிரதேசங்களில் விவசாயிகள் பொதுவாக இவ்விரண்டு அமைப்புமுறைகளை வரவேற்கின்றனர். சில பகுதிகளில் இனப் பெருக்கம் விகிதம் குறைந்து வருகின்றது.


ஏற்பாட்டின் படி, இவ்வாண்டு குறைவான பிறப்பு வேகமான வளம் என்னும் திட்டப்பணி மேற்குப் பகுதிகள் முழுவதிலும் பரவல் செய்யப்படும். குடும்ப நலத் திட்டத்துக்கான பரிசு கொள்கை மேலும் மேம்பட்டு பரவல் செய்யப்படும். நிதி வாரியங்கள் இதற்கான கட்டணத்தை ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளன.
மக்கள் தொகை துறையிலான பல நிபுணர்கள் இந்தப் புதிய கொள்கைகளைப் பாராட்டினர். குடும்ப நலத் திட்டத் துறையில் சீனாவின் கருத்து

புதுப்பிக்கப்பட்டுள்ளதை இது காட்டுகின்றது என்று அவர்கள் கருதுகின்றனர். யுன்னான் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை ஆய்வகத்தின் துணைத் தலைவர் Luo Hua song கூறியதாவது,

கொள்கையின் நடைமுறையாக்கத்துடன், மக்கள் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. மக்கள் தொகை பயன் தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் கல்வி தரம் உயர்ந்து வருகின்றது. குடும்ப நல திட்டத்தின் அமைப்புமுறையும், வடிவமும் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. முன்பு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டது. தற்போது, நலன் வழிகாட்டலில் மக்கள் சுயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். குறைந்த இனப் பெருக்கம் என்ற இலக்கு நனவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தவிர, மிகத் தாழ்ந்த வாழ்க்கை காப்பீடு, கல்வி, உதவி முதலிய சலுகை கொள்கைகளுடன் குடும்ப நலத்திட்டம் இணைக்கப்பட்டது. குடும்ப நல திட்டத்தை நடைமுறைப்படுத்திய குடும்பங்கள் முன்னுரிமையுடன் சலுகையை அனுபவிக்கலாம். இது மட்டுமல்ல, பிறப்பு பால் சமநிலையை மேம்படுத்தும் கொள்கையை சீனா வகுத்து, நாடோடி மக்களின் சட்டப்பூர்வ நலனைப் பாதுகாக்கின்றது.
சான் வே ச்சின் மேலும் கூறியதாவது


அரசை முக்கியமாகக் கொண்டு, சமூகத்தை இணைக்கும் குடும்ப நலத் திட்ட நலனுடன் தொடர்புடைய கொள்கை அமைப்புமுறையைக் அமைத்து மேம்படுத்துவது, விவசாயிகள் சுயமாக குடும்ப நலத் திட்டத்தைப் பின்பற்றி, கிராமப்புறங்களில் அளவுக்கு மீறிய மக்கள் தொகை அதிகரிப்பை த் தவிர்த்து, தாழ்ந்த இனப் பெருக்கத்தை நிதானப்படுத்தும் பயன் தரும் வழியாகும். கிராமப்புறத்தில் சில குடும்ப நலத் திட்டத்தை பின்பற்றும் மக்களின் உண்மை இன்னல்களை நீக்கி, சமூக நியாயத்தை வெளிப்படுத்தும் நல்ல நிர்வாக முறையாகும் என்றார்.