சீன திபெத் இனத்தவரின் கசார் காவியம் பற்றி அவரது கருத்து
cri
கலை: இடம்பெறும் முதல் கடிதம் மணமேடு தேவராஜா எழுதியது. சீன திபெத் இனத்தவரின் கசார் காவியம் பற்றி அவரது கருத்து இதோ. நிகழ்ச்சியில் கசார் காவியம் பற்றிக் கேட்டபோது, இந்திய காவியங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவை நினைவுக்கு வந்தன. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக பேணப்பட்டு வந்த கசார் மன்னனின் வீர தீரச் செயல்களைக் கூறும் இக்காவியம், அக்கால அரசியல், பொருளாதாரம், பண்பாடு, திபெத் மொழி வளர்ச்சி ஆகியவற்றை முடுமையாக பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. செவிவழி காவியமான கசார் காவியம் கடந்த சில ஆண்டுகளில் எழுத்து வடிவில் பதியப்பட்டு வருவது கசார் காவியம் உலகின் அமர காவியங்களில் ஒன்றாக திகழ வழி வகுக்கும் என நன்புகிறேன் என்று எழுதியுள்ளார். க்ளீட்டஸ்: அடுத்து ராமியம்பட்டி சீ. பாரதி எழுதிய மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். வேகமாக வளரும் மேற்குச் சீனாவின் பொருளாதாரம் பற்றிக் கேட்டேன். இதில் முதாவது பண்பாட்டுத்துறை பொருட்காட்சி சீனாவின் வளர்ச்சியைத் தூண்டுவதில் யுன்னான் மாநிலம் முன்னணி வகிக்கும் என்று அறிந்தேன். இது தமிழகத்தும் கோவை நகரத்தை போல் என்று அறிந்தேன். இது உலக வளரும் நாடுகளுக்கு நல்ல பயனுள்ள உதாரணமாகும். வழங்கிய மலர்விழி அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். கலை: அடுத்து வசந்த விழாக்கால சியாவ்ச்சு பற்றி ஆரணி பொன் தங்கவேலனின் கருத்து. தமிழநாட்டில் ஆடிமாத கேழ்வரகு கூழ், ஐப்பசி மாத அதிரசம், மார்கழி திருவாதிரைக்களி, தைத்திங்கள் பொங்கல், மாசி மயானச்சுண்டல், ஆவனி கொழுக்கட்டை இவை தவிர பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு ஆகியவை சிறப்புக்குரியன. இவை போல சீனாவில் வசந்தவிழாவின் போது சியாவ்ச்சு உண்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். காய்கறி வெட்டும்போது ஏற்படும் ஒலி, செல்வம் பெருகுகிறது என்ற பொருள் தருவதாக கருதப்படுகிறது. நல்ல எண்ணம் நலதையே கொடுக்கும் என்று கூறியுள்ளார். க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி எம். ஒய், எஃப். ஃபஸ்மினா எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை சிரமங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து கேட்டு வருகிறேன். அறிவிப்பாளர்களின் திறமை அவர்கள் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது. வண்டிச்சக்கரத்தில் உரிய பொருட்கள் இருந்தால்தான் அதன் பயனை முழுதாக பெறமுடியும். அதுபோல சீன வானொலிக்கு நேயர்களின் பங்களிப்பு உற்சாகம் தந்து ஊக்குவித்து நன்றாக பணியாற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். கலை: அன்பு நேயர் ஃபஸ்மினா அவர்களே, தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. நேயர்களின் அன்பான ஆதரவும், அக்கறையான பங்கேற்பும் எமக்கு மகிழ்ச்சி தரும் அம்சங்கள். நாம் பெரிதும் வரவேற்கும் அம்சங்கள் ஆகும். தொடர்ந்து வெண்ணந்தூர் எஸ். குமரவேல் எழுதிய கடிதம். சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மூலம் சீனா மற்றும் சீன மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை அறிய முடிகிறது. இந்தியாவை போல, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகவும் சீனா திகழ்கிறது. இந்தியாவில் பல பிரிவு மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதை போல, சீனாவிலும் பல பிரிவு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்பது தங்கள் ஒலிபரப்பு மூலம் நாங்கள் அறிந்துகொண்டதாகும். சீனாவில் பழங்கால கலைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுவதற்கு சீன அரசும் சீன மக்களும் முக்கிய காரணம் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியடைகிறோம் என்று எழுதியுள்ளார். க்ளீட்டஸ்: அடுத்து பஞ்சநதிக்குளம் ஆர். விஜயகுமார் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறேன். செய்திகள், தமிழ் மூலம் சீனம் போன்ற நிகழ்ச்சிகள் பயன் பெற்று வருகிறேன். தமிழ் மூலம் சீன நிகழ்ச்சியின் மூலம் ஆண்டு பற்றி குறிப்பிடுவதை அறிந்துகொண்டேன். ஆர் லிங் லிங் சி என்றால் 2007, இ ஜியொ ஜியொ பா என்றால் 1998, யுவே என்றால் மாதம் என்பதையெல்லாம் அறிந்தேன். இந்நிகழ்ச்சிகள் தங்கள் வானொலியில் நேயராக இணைந்துகொள்ளும் விருப்பத்தை ஏற்படுத்தின. வானொலியை கேட்கத் தூண்டிய சீன வானொலி நேயர் தி. மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். கலை: நேயர் மணிகண்டனுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும். புதிய நேயராக இணைய விரும்பும் விஜயகுமார் அவர்களுக்கு எம் வரவேற்பு. தொடர்ந்து சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி குறித்து பெரியகாலாப்பட்டு பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். 1200 ஆண்டுகால வரலாறுடைய தாங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட பிலூ கோயில் பற்றியும் அதன் சுவர் ஓவியங்களின் தனிச் சிரப்பு பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறினார் கலைமகள். அந்தச் சுவர் ஓவியங்கள் புத்த மதம், தாவ் மதம் ஆகியவற்றை இன்றும் பொலிவிழக்காது பிரதிபலித்து வரும் அழகை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் ஏற்பட்டது. தங்க மாவு சேர்த்து வரையப்பட்ட இந்த ஓவியங்கள் முப்பரிமாண காட்சியளிப்பதைக் கேட்டு மனதளவில் கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
|
|