ஷாங்காய்-ஹாங் சோ காந்த தொடர் வண்டி திட்டப்பணி
cri
ஷாங்காய்-ஹாங் சோ காந்த தொடர் வண்டி திட்டப்பணியின் உருவாக்கம் தற்போது ஆய்வுக் கட்டத்தில் உள்ளது. ஷாங்காய் மாநகராட்சி அரசின் செய்தித்தொடர்பாளர் Jiao Yang நேற்று இதை தெரிவித்துள்ளார்.
காந்த தொடர் வண்டி போக்குவரத்துத் திட்டப்பணி, சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தற்போது சீனத் தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமை பணியகம் கையாண்டுள்ளது. இப்பணியகம் தொடர்புடைய விதிகளுக்கிணங்க, பல்வேறு துறையினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அறிவியல் முறையில் முடிவு எடுத்து, இறுதியில், பரிசீலனை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்.
இக்காந்த தொடர் வண்டி பாதையின் முழு நீளம், 175 கிலோமீட்டர். கிழக்குச் சீனாவின் ஷாங்காய், Jia Xing, ஹாங் சோ ஆகியவற்றை இது ஒன்றிணைக்கும். இந்தத் தொடர் வண்டி பாதை கட்டிமுடிக்கப்பட்ட பின் யாங் சூ ஆற்று கழிமுகப் பிரதேசத்தில் போக்குவரத்து வசதியைப் பெரிதும் மேம்படுத்தும்.
|
|