• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-21 16:30:19    
ஈர்ப்பு ஆற்றல் மிக்க CHONG QING மாநகரம்

cri

சீனாவின் புகழ்பெற்ற இயற்கைக் காட்சி மண்டலங்களில், CHONG QING மாநகரிலுள்ள யாங் சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு, தா சூ கற்சிலை ஆகியவை, முக்கிய இடம்பெறுகின்றன. அழகான இயற்கை காட்சி வளம், செழிப்பான மானுடவியல் பண்பாட்டுக் காட்சி இடங்கள் முதலியவற்றினால், CHONG QING மாநகரம், உலகளவில் மென்மேலும் அதிகமான பயணியர்களை ஈர்த்து வருகிறது.

 
யாங் சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு சுற்றுலா, ஈர்ப்பு ஆற்றல் மிக்க சுற்றுலா பயணத் திட்டப்பணியாகும் என்பதில் ஐயமில்லை. மூ மலை பள்ளத்தாக்கு, சீனாவில் மிகப் பெரிய ஆறான, சுமார் 6300 கிலோமீட்டர் நீளமான யாங்சி ஆற்றைச் சேர்ந்த பெரிய பள்ளத்தாக்கு ஆகும். யாங்சி ஆற்றின் இயற்கைக் காட்சியில் இது குறிப்பிடத்தக்கது. மேற்கில், CHONG QING மாநகரத்தின் FENG JIE மாவட்டத்திலிருந்து, கிழக்கில், HU BEI மாநிலத்தின் YI CHANG நகரம் வரை, QU TANG பள்ளத்தாக்கு, WU பள்ளத்தாக்கு, XI LING பள்ளத்தாக்கு ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. அதன் முழு நீளம், சுமார் 200 கிலோமீட்டராகும். இதில் பள்ளத்தாக்குப் பகுதி, 90 கிலோமீட்டர் நீளமானது.
யாங்சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு, உலகளவில் படகு மூலம் சுற்றுலா செய்யும் மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஆகும். பயணியர்கள் சுற்றுலாப் படகு மூலம், பள்ளத்தாக்கின் இயற்கைக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம். சான் தூ மாநிலத்திலிருந்து வந்த பயணி திரு லீ கூறியதாவது:


சுற்றுலாப்படகு மூலம், ஆற்றின் மேற்பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு மேதுவாக செல்லும் உணர்வு மிகவும் நன்றாக இருக்கிறது. படகின் தளத்தில் அமர்ந்து, மலை, பள்ளத்தாக்கு, கிராமங்கள் முதலியவற்றைப் பார்த்து ரசிக்கலாம். திரைப்படக் காட்சியைப் போன்றது என்றார் அவர்.
மூமலை சுற்றுலாம், சீனத் தேசிய சுற்றுலா பணியகம் வெளிநாடுகளுக்குப் பிரச்சாரம் செய்யும் மூன்று பொன் சுற்றுலா நெறிகளில் ஒன்றாகும். மூமலை பள்ளத்தாக்கு நீர் சேமிப்புக்கான முக்கிய திட்டப்பணியின் கட்டுமானத்துடன், மூமலை நீர்த்தேக்கம் நீரைச் சேமித்து வருகிறது. இதனால், புதிய காட்சிக் காண கிடைக்கிறது.
CHONG QING மாநகரத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் போது, மூ மலை பள்ளத்தாக்கைத் தவிர, தா சூ கற்சிலையைப் பார்க்க வேண்டும். ஆயிரமாண்டு காலத்திற்கு மேலான வரலாறுடைய தா சூ கற்சிலைகளில் பெரும்பாலானவை, புத்தர் சிலைகள். சில தெள மதச்சிலைகள் மற்றும் கன்பிஃயூசியஸ் கற்சிலைகள் உள்ளன. அவை எல்லாம், சீன கற்குகைக் கலையின் தலைச்சிறந்த பிரதிநிதித்துவ படைப்புகளாகும். 1999ம் ஆண்டில், தா சூ கற்சிலை குழுமம், ஐ.நாவின் யுனேஸ்கோவினால், உலகப் பண்பாட்டு மரபு செல்வப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தா சூ கற்சிலைகள், CHONG QING மாநகரத்தின் தா சூ மாவட்டத்தில் அமைந்துள்ளன. இதில் BAO DING மலை மற்றும் வடக்கு மலையிலுள்ள கற்சிலைகள் மிகவும் புகழ்பெற்றவை, மிகவும் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. BAO DING மலையிலுள்ள கற்சிலைகள், தாஃபோ வளைகுடாவை மையமாக கொண்டவை. கொண்டை ஊசி வடிவிலான 400 மீட்டர் நீளமுடைய கற்பாறையில், சுமார் 10 ஆயிரம் கற்சிலைகள், வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. தா சூ கலை அருங்காட்சியகத்தின் வழிகாட்டி YANG QIN அம்மையார் கூறியதாவது:

 
இவ்விடம், சீனாவின் நான் சுங் வம்சக்காலத்தில் துவக்கி வைக்கப்பட்டது. ZHAO ZHI FENG என்னும் அப்போதைய தலைமைக்குரு ஒருவர், புத்தமதத்தைப் பரவல் செய்யும் பொருட்டு, சுமார் 70 ஆண்டுக்காலத்தில் கற்சிலையைச் செதுக்கினார் என்றார் அவர்.
ஜெர்மனியின் பயணியர் HILDE ANDRESEN அம்மையார் தா சூ கற்சிலைகளைப் பார்வையிட்ட பிறகு எமது செய்தியாளிடம் கூறியதாவது:
இதுவரை, பார்த்த கற்சிலைகள், எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய கலைப்பொருட்களைப் பார்த்து, அதன் வரலாற்றைப் புரிந்துகொள்வது மிகவும் அரிதானது என்று அவர் தெரிவித்தார்.
யாங்சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு, தா சூ கற்சிலைகள் ஆகியவற்றை தவிர, CHONG QING மாநகரம், சுற்றுப்பயணம் மேற்கொள்ளத்தக்க ஒன்றாகும். சீனாவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான CHONG QING, மலை நகரமாகவும், ஆற்று நகரமாகவும் அழைக்கப்படுகிறது. மலை நகரத்தின் இரவுக்காட்சி மிகவும் அழகானது.
கடந்த சில ஆண்டுகளில், CHONG QING மாநகரத்தின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. பயணியரின் எண்ணிக்கையும், சுற்றுலா வருமானும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மீது, CHONG QING சுற்றுலா பணியகத்தின் தலைவர் WANG AI ZU நம்பிக்கைக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:


மேற்கு பகுதியில் சுற்றுலா முனையமாகவும், யாங்சி ஆற்றின் மேற்பகுதியின் சுற்றலா மையமாகவும், CHONG QING மாறவுள்ளது. கடந்த ஆண்டில், CHONG QINGகில் வருகை தந்த பயணியரின் எண்ணிக்கை, 6 கோடியே 80 லட்சமாகும். சுற்றுலா வருமானம், 3640 கோடி யுவானை எட்டியுள்ளது. CHONG QING மாநகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இது, 9.8 விழுக்காடு வகித்துள்ளது. 2010ம் ஆண்டில், சுற்றுலாத் துறை, CHONG QINGகின் முதுகெலும்புத் தொழிற்துறையாக மாறும். இது, CHONG QING பொருளாதார வளர்ச்சியில் மிகவும் முக்கியமானப்பகுதியாகவும் இருக்கிறது என்றார் அவர்.
நேயர்கள் இதுவரை, ஈர்ப்பு ஆற்றல் மிக்க CHONG QING மாநகரம் பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி நிறைவடைகிறது.