• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-22 14:15:10    
ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்களை தேர்வு செய்யும் பணி

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் நகரத் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்யும் பணி 18ம் நாள் பெய்சிங்கில் துவங்கியது.

நகரத் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கை, 4 லட்சமாகும். பெய்சிங் நகர நிலைமையை நன்றாக அறிந்து கொள்ளும் பெய்சிங் நகரவாசிகள், முக்கியமாக தேர்ந்தெருக்கப்படுவர். 2008ம் ஆண்டு ஜூலை திங்களில் இப்பணி முடிவடையும் என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வ தொண்டர்கள் பணிக்குப் பொறுப்பான ஒருங்கிணைப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் போது, போட்டி தங்கு தடையின்றி நடைபெற்று நகரின் பல்வேறு அலுவல்கள் இயல்பாக செயல்படும் வகையில், ஒலிம்பிக் திடல்கள் அரங்குகள் மற்றும் சுற்றுப்புறப்பிரதேசங்களிலும், நகரின் முக்கிய பிரதேசங்களிலும் தன்னார்வ சேவையை மேற்கொள்ள வேண்டும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் நகரத் தன்னார்வ தொண்டர்களின் பணி இதுவேயாகும்.

தற்போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு லட்சம் தன்னார்வ தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றது.