ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவற்றிலிருந்து நலன் பெற்றுள்ளன. 12வயதான சென் சி, சீனாவின் தென் பகுதியிலுள்ள சாங்சா நகரில் துவக்க பள்ளியில் பயில்கின்ற ஒரு மாணவராவார். பொது நேரத்தில், அவர், கவனத்துடன் வாழ்க்கையை பார்க்கிறார். பார்ப்பதில் கிடைத்த கண்டிப்புக்கிணங்க, அவர் தனது கைகளால் ஒரு சிறிய பொருளை தயாரித்தார். அண்மையில் அவர் கண்டுபிடித்த செய்த கை கடிகார வடிவ திசை காட்டும் கருவி சோங் ச்சின் லீன் நிதியத்தின் குழந்தை கண்டு பிடிப்பாளர் பரிசின் வெண்கல பதக்கம் பெற்றுள்ளது. பரிசு பெற்றமை, அவருடைய நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இரைச்சல் மூலம், ஒரு மின்னாக்கியை தயாரிப்பது என்பது, அவருடைய புதிய எண்ணம் ஆகும்.
தயாரிப்பு போக்கில், பல்வேறு துறையிலான அறிவியல் தொழில் நுட்ப அறிவுகளை பெற முடியும். நமது அறிவு அதிகரிப்பதோடு, கைகளால் தயாரிக்கப்படும் நுட்பத்தின் திறனும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர். குழந்தை கண்டுபிடிப்பாளர் பரிசு, சோங் ச்சிங் லீன் நிதியத்தின் மிக அதிகமான பரிசுகளில் ஒன்றாகும். சுமார் 1 லட்சம் குழந்தைகள் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர். சுமார் ஆயிர குழந்தைகள், இதில் பரிசு பெற்றனர். கண்டுபிடிப்புகள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளுடன் தொடர்புடையவை குழந்தைகள் கட்டாய கல்வி பெறுவதோடு, மேலும் அதிகமான நடைமுறை வாய்ப்புகள் பெறலாம் என்பது இந்த நடவடிக்கை மேற்கொள்வதன் நோக்கமாகும் என்று சோ ச்சிங் லீன் நிதியத்தின் குழந்தை கண்டுபிடிப்பாளர் பரிசு கமிட்டியின் துணை இயக்குநர் ரு சாங் கூறினார்.
இந்த நடவடிக்கை, குழந்தைகளின் புத்தாக்க எழுச்சியையும் நடைமுறை திறனையும் வளர்க்கின்றது. நாட்டு வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பத்தை சார்ந்தது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, திறமைசாலிகளை சார்ந்தது. குழந்தை பருவம் முதலே, திறமைசாலிகளை வளர்க்க வேண்டும். இது ஒரு கருத்தமைவாகும் என்றார் அவர். நகரங்களில் வாழ்கின்ற குழந்தைகள் பெற்றோர்களின் அளவுக்கு மீறிய அன்பு அளிக்கப்படுவதால், தனியாக வாழ்க்கை எதிர்க்கொள்ளும் திறன் குறைவாக இருக்கிறது. இந்நிலைமைக்கேற்ப, சோங் ச்சின் லீன் நிதியம், ஆய்வு முறையில் கோடை முகாம் நடவடி்ககை மேற்கொண்டு, குழந்தைகளுக்கு பயிற்சி வாய்ப்பை வழங்கியுள்ளது. பெய்சிங்கைச் சேர்ந்த குழந்தைகள், யுன் சொங் யுன் பெய் என்னும் இரட்டை குழந்தைகள் இவ்வாண்டு 11 வயதானவர்கள் கடந்த ஆண்டு, அவர்கள் இந்த கோடை முகாம் நடவடி்ககையில் கலந்துக் கொண்டனர். இது பற்றி, யுன் சொங் செய்தியாளரிடம் கூறியதாவது
இந்த கோடை முகாம் நடவடி்ககை, நமது திறமைகளை உயர்த்தியுள்ளது. எனவே, இந்த நடவடிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தாம் கருதுவதாக கூறினார். தவிரவும், வறுமை வட்டாரத்திலும், கிராமத்திலும் வாழ்க்கின்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு சோங் ச்சின் லீன் நிதியம் பெரும் கவனம் செலுத்துகிறது. மேற்கு பகுதியில் சுகாதார நிலைமை பின் தங்கிய நிலையில் இருப்பதக்கிணங்க, சீனாவின் மேற்கு பகுதியில் மகளிர் மற்றும் குழந்தைகளின் உடல் நலத் திட்டத்தை இந்நிதியம் நடைமுறைப்படுத்த துவங்கியது. அப்பிரதேசங்களில் வாழ்கின்ற தாய்மார்களுக்கும் மருந்துகளையும் மருத்துவர்களையும் அனுப்பியுள்ளது. நேயர்கள், பெருமை மிக்க சீன பெண்மணி சோ ச்சிங் லீன் அம்மையார் என்னும் சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|