• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-24 20:27:32    
ஸ்பேயினில் சீனத் திபெத் பிரதிநிதிக்குழுவின் பயணம்

cri
சீனாவின் திபெத் இயல் அறிஞர்கள் மற்றும் வாழும் புத்தர்களின் பிரதிநிதிக்குழு ஸ்பேயினில் பயணம் மேற்கொள்கின்றது. திபெத் தன்னாட்சி பிரதேசம், சிங்ஹேய் மாநிலத்தைச் சேர்ந்த திபெத் இனப் பிரதேசம் ஆகியவை, பொருளாதார மற்றும் சமூகத்துறைகளில் பெற்றுள்ள மாபெரும் சாதனையையும், மத்திய அரசின் ஆதரவுடன், உள்ளூர் தலைச்சிறந்த பாரம்பரிய பண்பாட்டைப் பேணிக்காத்து வளர்ப்பதற்காகவும், உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முயற்சியையும், அறிமுகப்படுத்தும் பொருட்டு, இப்பிரதிநிதிக்குழு, பல நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.

திபெத் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தற்கால திபெத் ஆய்வகத்தின் தலைவர் அவாங்சேரன் பேசுகையில், திபெதின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்தோடு, உள்ளூரின் பாரம்பரிய பண்பாடு, மத நம்பிக்கை, இயற்கை சூழல் ஆகியவையும், பேணிக்காக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதை திறக்கப்பட்டமை, திபெத்தின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்தி, உள்ளூரின் சுற்றுலாத் துறை, உணவு துறை மற்றும் சேவைத்துறையின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி வருகிறது என்றும் அவாங்செரன் கூறினார்.