• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-26 15:49:44    
திபெத்தின் வரலாற்று மீளாய்வு

cri

சீன மத்திய செய்தி விளக்க திரைப்பட தயாரிப்பு ஆலையால் பரிந்துரை செய்யப்பட்ட திபெத் வரலாற்று மீளாய்வு என்னும் செய்தி விளக்கப்படம் அண்மையில் பெய்சிங் மாநகரில் திரையிடப்பட்டது. 1959ம் ஆண்டில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பான திபெத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளின் உண்மையான விபரங்கள் இந்த திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த செய்தி விளக்கப்படம் திபெத்தின பிரமுகர்களிடையில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. திபெத் இனத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜாசிவாண்டெ என்பவருக்கு வயது 73. திபெத் ஜனநாயக சீர்திருத்த அனுபவம் அவருக்கு உண்டு. 50 ஆண்டுகளுக்கு முன் திபெத்தின் முதல் எளிப்பதிவாளர் முறையில் அவர் பாலா பண்ணை தோட்டத்தை படம் எடுத்தார். பாலா பண்ணை தோட்டம் திபெத்தின் மிக பெரிய 12 பண்ணை தோட்டங்களில் ஒன்றாகும். கடந்த 50ம் ஆண்டுகளுக்கு முன் உயர் குடி மக்களின் உரிமையாக இருந்த இந்தத் தோட்டங்களின் உட்புறம் சொர்க்கமாகவும் வெளிப்புறம் நரகமாகவும் வர்ணிக்கப்பட்டன. ஜாசிவாண்டெ ஏழை குடும்பத்தில் பிறந்தவர். செய்தி விளக்கப்படத்தை எடுக்கும் போது பண்ணை தோட்டத்திலுள்ள ஆடம்பரமான நல்ல வசதியான வாழ்க்கைச் சூழலை பார்த்த போது ஆச்சரியப்பட்டார். இது பற்றி அவர் கூறியதாவது

 
நாங்கள் பாலா பண்ணைத் தோட்டத்தை திரைப்படம் எடுக்கும் போது எஜமானர் பாலா வாஞ்சியூ தம்பதியினர் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். வீட்டு நிர்வாகி இரண்டு தோல் பைகளில் வைக்கப்பட்ட சாவி கொத்துகளை கொண்டு எங்களுக்காக கதவை தனித்தனியாக திறந்தார். தோட்டம் மிக செல்வமடைந்தது. அன்னிய மதுக்கள் உள்ளிட்ட பல்வகை மதுக்கள், உணவு பொருட்கள், மற்றும் பல்வகை இனிப்பு சிற்றுண்டிகள் அறைகளில் நிறைவாக சேமிக்கப்பட்டிருந்தன என்றார் அவர். ஆனால் தோட்டத்திற்கு வெளியே அப்போதைய திபெத்தின் 95 விழுக்காட்டு வேளாண் அடிமைகள் உயிரிழக்கும் விளம்பில் வாழ்ந்தனர் என்று அவர் நினைவு கூரந்தார்.
2006ம் ஆண்டில் ஜாசிவாண்டெயும் படம் எடுக்கும் அணியும் மீண்டும் பாலா பண்ணைத் தோட்டத்திற்கு வந்தனர். முன் அவர் கண்ட ஆடம்பர வாழ்க்கைச் சூழ்நிலை தோட்டத்தில் தொடர்ந்து காணப்பட்டுள்ளது.


1959ம் ஆண்டில் ஜனநாயகச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அரசியலும் மதமும் இணைந்த நிலபிரபுத்துவ வேளாண் அடிமை அமைப்பு முறை கொண்ட சமூகத்தில் திபெத் இருந்தது. வட்டார அதிகாரிகள், துறவிகள், உயர் குடி மக்கள் ஆகியோர் திபெத்தை ஆட்சிபுரிந்தனர். அவர்களுக்கு சிறப்பு சலுகை உண்டு.

ஆனால் வேளாண் அடிமைகளுக்கு உரிமையும் சுதந்திரமும் இல்லை. வாழ்க்கை மிக வறுமையானது. அவர்களின் தலைவிதி உயர் குடி மக்களின் கையில் இருந்தது. சீனத் திபெத்தியல் ஆய்வு மையத்தின் தலைமைச் செயலாளர் லாபாபிடஞ்சொ அப்போதைய சமூகத்தின் அமைப்பு முறை பற்றி எடுத்துரைத்தார். அவர் கூறியதாவது.