க்ளீட்டஸ்: பாத்திகாரன்பட்டி அழகேசன் எழுதிய கடிதத்தில் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், மீன் சூப் செய்வது பற்றிய விளக்கம் அதன் சுவை அறியத் தூண்டுவதாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க நேயர் ஆல்பர்ட் அவர்களின் கருத்து என்று அறிவித்தபோது. அவர் என்ன கூறப்போகிறார் என்று அலட்சியமாக இருந்ததை, அவரின் அழகு நடைத் தமிழ் உச்சரிப்பு வியப்பில் ஆழ்த்தியது, அவரை மனதார பாராட்டினேன். அனைவரும் அவரை பாராட்டவேண்டும் என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து ஈரோடு ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். சீன தேசிய மக்கள் பேரவைக்கூட்டம் பற்றி ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தலைவர் பி. ஏ. நாச்சிமுத்து அவர்கள் பல கருத்துக்களை குறிப்பிட்டார். மேலும் வேளாண் துறைக்கு நிறையத் திட்டங்கள் வகுத்துள்ளதைக் கேட்டபோது கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் அரசாக செயல்படும் நோக்கில் மக்கள் பேரவை திட்டமிடுகிறது என்றறிந்து மகிழ்கிறோம், பாராட்டுக்கள் என்று நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிட்டார் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் கே. அசோக்குமார் எழுதிய கடிதம். உலகிலேயே மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டு வருவதை மலர்ச்சோலை நிகழ்ச்சி மூலம் அறிந்தேன். 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மருத்துவமனை அதிக படுக்கை வசதி கொண்டது. அறுவை சிகிச்சைகள், சிறப்பு பணியாளர்கள் என பல வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை 2008 ஒலிம்பிக் போட்டியின் போது செயல்படவுள்ளது என்பதை அறிந்தேன். மலர்ச்சோலை நிகழ்ச்சி சிறப்பான தகவல்களை அறியத்தருகிறது என்று எழுதியுள்ளார்.
கலை: அடுத்து கொமாரப்பாளையம் நேயர் கு. மோகனசுந்தரம் எழுதிய கடிதம். அறிவுப்பூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதத்திலான, சீனப் பண்பாட்டை எடுத்துக்கூறும் பாங்கிலான தங்களது நிகழ்ச்சிகளை ரசித்து கேட்டு வருகிறேன். விவசாய மற்றும் விசைத்தறித் தொழில் காரணமாக வேலைபளு அதிகமானதால், தொடர்ந்து உங்களோடு கடிதத் தொடர்பில் நிற்க இயலவில்லை என்று எழுதியுள்ளார். அன்பு மோகனசுந்தரம் அவர்களே, தங்களின் அன்புக்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வரும் ஆர்வத்துக்கும் நன்றிகள். வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு சில வரிகள் எழுதி அனுப்பத் தயங்கவேண்டாம்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து பெத்துரெட்டிபட்டி ஆர். பத்மநாதன் எழுதிய கடிதம். அண்மைக்காலமாக சீன வானொலி கேட்கும் நேயர்களின் வரிசையில் நானும் இணைந்துள்ளேன். தமிழ் ஒலிபரப்பு மிக அருமை. மேலும் நிகழ்ச்சிகளை சிறப்பாக்க, வெளிநாட்டு நேயர்களின் நேரடிக் கலந்தாய்வு, நகைச்சுவை, சீன இந்திய பண்பாட்டு முறைகள் பற்ரிய ஆய்வு மற்றும் ஒப்பீடு, சீன அரசு வெளிநாட்டினருக்கு தரும் சலுகைகள், அதாவது வேலைவாய்ப்பு, தொழில் வியாபரம் நடத்த வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தந்தால் நல்லது. மேலும் சீனா சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு உதவியான தகவல்களை தரலாம் என்று கூறியுள்ளார்.
கலை: அன்பர் பதமாநாதன் அவர்களே. தங்களின் அன்பான ஆலோசனைகளுக்கு நன்றிகள். நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில ஏற்கனவே எமது நிகழ்ச்சிகளில் இடம்பெற்று வருகின்றன. மற்ற கருத்துக்களை எமது கவனத்தில் வைத்து உரிய நேரத்தில் ஆவன செய்ய முயற்சிப்போம்.
அடுத்து சீன வானொலியை பற்றி குருவம்பட்டி பி தாண்டவன் எழுதிய கவிதை ஒன்று.
மஞ்சள் ஆற்றுப் பகுதியில் பிறந்து - நாளும் விஞ்சி வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் சீனா கொஞ்சு தாயின் குழந்தைகள் பேசும் தமிழ்தான் மஞ்சு சூழும் வானில் வந்திடும் வளமாய் அறுபத்து மூன்று ஆகஸ்டில் துவங்கி நாற்பத்தைந்து பெருகிய ஆண்டில் லீலிஜிங், வாங்கூஷு, மூன்றாம் பிறையென சுன் கோ சியாங், வளரும் நிலவாய் கன்சியங்குவா கண்டது வரலாறே.
மலையா உழைப்பு மாண்புடை பண்பு தாய்மை நிலையால் உலகை உயர்த்தும் மகளிர் பலராம் மலையென உயரும் சீன வானொலி தமிழ்த்துறை கலையரசி தலைமையில் காணுதே நாளும் புரட்சி சங்கம் கண்டு பாண்டியர் தமிழை வளர்த்தனர் வங்கம் கடந்து சேர சோழரும் பரப்பினர் தங்கத் தமிழைத் தாயென கொள்ளும் மக்களைச் சங்கமம் செய்த்வது சீன வானொலி ஒன்றே.
|