• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-28 14:09:34    
ராட்சத பாண்டா போட்டி பற்றிய சிறப்பு பரிசு பற்றிய தகவல்

cri

ராட்சத பாண்டா போட்டி பற்றிய சிறப்பு பரிசு பற்றிய தகவல்

கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கிளீ........கலை சென்ற வாரத்தில் ராட்சத பாண்டா என்னும் பொது அறிவு போட்டியில் நேயர்கள் பங்கெடுப்பது பற்றி கருத்து பரிமாறி கொண்டோம்.

கலை......ஆமாம். இது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து நேயர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

கிளீ.......உண்மையா? இவ்வளவு தகவல் உண்டா?

கலை.......உண்டு. நீங்கள் பாருங்கள். வழக்கம் போல பொது அறிவு போட்டியில் சீன வானொலி நிலையத்தின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நேயர்கள் கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு பரிசு பெற்றோர் சீனாவுக்கு வந்து சுற்று பயணம் செய்வது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆனால் ஒரு நாட்டைச் சேர்ந்த நேயர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக சீனாவுக்கு வரும் வாய்ப்பு பெறுவது மிக மிகக் குறைவு.

கிளீ.......என் நாபகத்தில் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக நமது தமிழ்ப் பிரிவின் நேயர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

கலை......ஆமாம். ராட்சத பாண்டா என்னும் பொது அறிவுப் போட்டியில் சிறப்பு பரிசு எங்கள் தமிழ்ப் பிரிவின் நேயர்களுக்கு வழங்கப்படலாமா என்ற ஐயத்துடன் மீண்டும் விண்ணப்பம் செய்து முயற்சித்தோம்.

கிளீ.......என்ன நடந்தது?

கலை.......கடைசியில் முதலாவது ஆசிய துறையின் பணிக் கூட்டத்தில் கலந்தாலோசித்த படி தமிழ்ப் பிரிவின் நேயர் ஒருவர் சிறப்புப் பரிசு பெற்று பெய்சிங்குக்கு வரலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளீ.......ஆகவே. இந்த ஆண்டில் ஒருவர் சிறப்பு பரிசு பெறுபவராக சீனாவுக்கு வந்து ராட்சத பாண்டாவின் ஊரான சிச்சவான் மாநிலத்தில் சுற்று பயணம் செய்வார் என்று பொருள்படுகின்றது அப்படித்தானே.

கலை.......நீங்கள் சொன்னது சரிதான். பாண்டிச்சேரி என் பால குமார் கடந்த பல ஆண்டுகளில் நேயர் அணியின் வளர்ச்சிக்காகவும், கணிணியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி நேயர்களுக்கு உதவி செய்வதற்காகவும் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும் வகையில் ராட்சத பாண்டா என்னும் பொது அறிவுப் போட்டிக்கான சிறப்புப் பரிசு பெறுவதென்ற பெருமை அவருக்கு வழங்கும் வகையில் அவரை பரிந்துரை செய்தோம்.

கிளீ........மகிழ்ச்சிகரமான செய்தி. கடைசியில் என் பால குமாருக்கு நேயர்களின் சார்பில் சீனாவில் சுற்று பயணம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

கலை.....ஆமாம். அவர் இப்போது சீனாவில் பயணம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

கிளீ......அப்படியிருந்தால் அவர் எப்போது சீனாவுக்கு வருவார்?

கலை.....கவலைப்படாதீர்கள். அவர் ஜுலை திங்கள் 2ம் நாள் சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வழியாக 3ம் நாள் அதிகாலை பெய்சிங் வருவார்.

கிளீ.......பால குமார் பெய்சிங் வந்த பின் எப்போது ராட்சத பாண்டாவின் ஊரான சிச்சவான் மாநிலத்துக்குப் புறப்பட வேண்டும்?

கலை.......திட்டத்தின் படி ஜுலை திங்கள் 6ம் நாள் பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு சிச்சவான் மாநிலத்துக்கு செல்ல வேண்டும்.

கிளீ.......அப்படியிருந்தால் எத்தனை நாட்கள் சிச்சவான் மாநிலத்தில் தங்கியிருக்க வேண்டும்?

கலை......கிட்டத்தட்ட ஒரு வாரம். திட்டத்தின் படி 11ம் நாள் பெய்சிங் திரும்ப வேண்டும்.

கிளீ...... சிச்சவான் மாநிலத்தில் எந்த இடங்களுக்கு சென்று அவர் பார்வையிடுவார்.

கலை......நீங்கள் இப்படி கேட்பது என்னை இன்னலுக்குள்ளாக்கியுள்ளது. உகந்த ஏற்பாடுகள் பற்றி எனக்கு இன்னும் தெரிவிக்க வில்லை. ஆனால் பால குமார் சீனாவில் தங்கியிருக்கும் போது ஒவ்வொரு நாளும் அவர் நேயர்களுக்கு தனது சுற்றுப் பயண அனுபவத்தை அறிவிப்பார். அப்போது நாங்கள் நேயர்களுடன் இணைந்து அவருடைய சுற்றுப் பயண அனுபவத்தை அனுபவிக்கலாம்.

கிளீ......நீங்கள் சொன்னது சரிதான். நாம் பொறுமையுடன் காத்திருக்கலாம்.