• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-28 16:19:42    
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலுள்ள பண்டைய பாகோ வீதி

cri

சுமார் 1000 மீட்டர் நீளமான பாகோ வீதி, லாசாவின் பழைய நகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது, 1300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது. கற்களால் போடப்பட்ட இவ்வீதி, லாசாவில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமான இடம் ஆகும்.


பாகோ வீதியில், கடைகளும் பயணியர்களும் மிகவும் அதிகமாகும். இவ்வீதியில், காணப்படும் நடமாடும் அங்காடிகளின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. திபெத் இன ஆடைகள், திபெத் கத்திகள், மதப் பொருட்கள் முதலியவையும், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் பல்வேறு வணிகப்பொருட்களும், வீதியின் இரு பக்கங்களிலும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சில கடைகள், லாசாவில் பல ஆண்டுகளாக வசித்த முஸ்லிம்களும், நேபாள மக்களும் திறந்து வைத்தவை. பாகோ வீதியின் வடபகுதியிலுள்ள SYAMU KAPU என்னும் சுற்றுலா கடையின் வாயலில், மூன்று வேறுபட்ட காலத்தின் பலகைகள் தொங்கவிடப்படுகின்றன. கடையின் நுழைவாயிலுள்ள மேசையில் வைக்கப்பட்ட ஒரு நிழற்படத்தை விருந்தினர்கள் பார்க்கலாம். படத்திலுள்ள ஆண் ஒருவர், மேற்காசிய தேசிய சீருடையும், தலையில் வெள்ளை தொப்பியும் அணிந்துள்ளார். இக்கடையின் உரிமையாளர் ரத்னா என்னும் அறிமுகப்படுத்துகையில், படத்திலுள்ள ஆண், அவருடைய தாத்தா என்றும், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நேபாளத்திலிருந்து திபெத்துக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டார் என்றும் கூறினார்.
சீனாவிலுள்ள நேபாள மக்கள் திறந்து வைத்த கடைகளில் SYAMU KAPU என்னும் கடை தனிச்சிறப்பு வாய்ந்தது. இதில், வேறுபட்ட காலத்தின் பல்வேறு வகை உலோக புத்தர் சிலைகள், பண்டைய பொருட்களை மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் முதலியவை, முக்கியமாக விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து வணிகப்பொருட்களும், நேபாளத்தில் தயாரிக்கப்பட்டவை. இக்கடை செழித்தோங்கிய காலத்தில், அதன் வணிக அலுவல் அளவும் மிகவும் பெரியது. திபெத்தில் முதலாவது மோட்டார்சைகிள், SYAMU KAPU என்பவரால், சீன-நேபாள எல்லையிலுள்ள இமயமலை நுழைவாயில் மூலம் திபெத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது என்று தெரிகிறது.


பாகோ வீதிக்கு வரும் போது, புகழ்பெற்ற MAKEYA AME என்னும் மதுவகத்தைப் பார்க்க வேண்டும். திபெத் மொழியில், MAKEYA AME என்பது புனிதமான தாய் அல்லது தூய்மையான கன்னி என்ற பொருளாகும். இந்தப் பெயர், ஒரு நாட்டுப்புறக்கதையுடன் தொடர்புடையது என்று மதுவகத்தின் உரிமையாளர் TSERING WANG QING அறிமுகப்படுத்தினார். மூன்னூறு ஆண்டுகளுக்கு முன், திபெதின் 6வது தலாய் லாமா TSANGYANG GYATSO, தூ மு தேவியைக் கண்டறிய, லாசாவின் வீதிகளிலும் மதுவகங்களிலும் பலமுறை தேடினார். TSERING WANG QING கூறியதாவது: 
அப்போதைய திபெத் மதுவகத்தில், TSANGYANG GYATSO ஒரு அழகான கன்னிப்பெண்ணைக் கண்டார். அவர் ஒரு போதும், இவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், இந்தக் கன்னி அமைதியாக அவ்விடத்தை விட்டுச் சென்றார். அவள், தூ மு தேவியாக இருக்கலாம் என்று, TSANGYANG GYATSO கருதுகின்றார் என்றார் அவர்.
தற்போதைய MAKEYA AME மதுவகம், கலை நயம் வாய்ந்து காணப்படுகிறது. அதன் உள்ளே சுவரில், ஓவியங்கள், நிழற்படங்கள், கைவினைக் கலைப்பொருட்கள் ஆகியவை, நிறைய பொருத்தப்பட்டுள்ளந. பல்வேறு ஆங்கில மொழி மற்றும் சீன மொழி நூல்கள், இங்கே பார்க்கப்படலாம். விருந்தினர்கள், நூலைப் படிக்கும் போது, திபெத்தின் நாட்டுப்புற இசையைக் கேட்டு, சுவையான மேலை வடிவிலான உணவுப்பொருட்களை உண்டு ரசிக்கலாம். இது, வெளிநாட்டு மற்றும் சீன பயணியர்கள் பாகோ வீதியில் பார்க்க வேண்டிய இடமாகும்.


பாகோ வீதி, லாசாவில் மிகவும் வளமான வணிக வீதியாகும். இதில், புகழ்பெற்ற திபெத் கலைப்பொருட்கள் விற்கப்படும் கடைகள் பல உள்ளன. இந்த கடைகளில் பெரும்பாலானவை, பாரம்பரிய திபெத் தாங்கார் ஓவியங்களையும், கைவினை திபெத் கம்பளங்களையும், விற்பனை செய்கின்றன. தாங்கார் என்பது, வழிபாட்டுக்கான மத ஓவியமாகவும், திபெத் இனப் பண்பாட்டில் தலைசிறந்த ஓவியக் கலை வடிவமாகவும் இருக்கிறது. பாகோ வீதியில், XUE YU என்னும் தாங்கார் கைவினைப்பொருட்கள் கடை, குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், ஜெர்மனி, நேபாளம் முதலிய நாடுகளின் பயணியர்கள் இங்கே வந்து தாங்கார் ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர். ஆண்டுதோறும், இக்கடை, ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் AN MEI HUA, பெய்ஜிங் பல்கலைக்கழக்கத்தில் கல்வி பயிலும் மாணவி ஆவார். அவரால், சீன மொழியையும் திபெத் மொழியையும் சரளமாக பேசமுடியும். கைவினைப்பொருட்கள் கடையைப் பார்த்த பிறகு, தாங்கார் ஓவியத்தின் நேர்த்தியான ஓவியக்கலையால், அவர் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது:
அனைத்து பண்பாட்டுப் பொருட்களும் கவர்ச்சிகரமானவை. வேறுபட்டவை என்றார் அவர்.


நாள்தோறும் காலை 9 மணியளவில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பயணிகள், பாகோ வீதிக்கு வருகின்றனர். கடையில், பல்வேறு கலைப்பொருட்கள் நிறைந்து காணப்படும். வண்ணமிகு கைவினைக் கம்பளம், தனிச்சிறப்பான ரெக்சின் தொப்பி, பண்டைய மர பாத்திரம், பல்வேறு நகைகள் முதலியவை, பயணியர்களுக்கு மிகவும் பிடித்தமானவை. பாகோ வீதியின் இரவுச் சந்தை, மேலும் ஈர்ப்புத்தன்மை வாயந்தது. இரவில், மேலும் பல கடைகள் திறந்து, இனிமையான இசைகளும், பல்வேறு உணவுகளின் சுவையான மணமும், பயணியர்களுக்கு அனுபவிக்க கிடைக்கின்றனர்.
MAKEYA AME மதுவகத்தின் உரிமையாளர் TSERING WANG QING பாகோ வீதியை மதிப்பிடுகையில் கூறியதாவது: 
பாகோ வீதி, உண்மையில் சர்வதேசமயமாக்க இடமாகும். பல்வேறு நாடுகளின் பயணியர்கள் இங்கே வந்து, திபெத் இன பண்பாட்டை உணர்வதோடு, வீட்டுக்குத் திரும்பும் உணர்வையும் அனுபவிக்கலாம் என்றார் அவர்.