பாகோ வீதி, லாசாவின் பழைய நகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. லாசாவில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமான இடம் ஆகும்.

பாகோ வீதியில், கடைகளும் பயணியர்களும் மிகவும் அதிகமாகும். இவ்வீதியில், காணப்படும் நடமாடும் அங்காடிகளின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. திபெத் இன ஆடைகள், திபெத் கத்திகள், மதப் பொருட்கள் முதலியவையும், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் பல்வேறு வணிகப்பொருட்களும், வீதியின் இரு பக்கங்களிலும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சில கடைகள், லாசாவில் பல ஆண்டுகளாக வசித்த முஸ்லிம்களும், நேபாள மக்களும் திறந்து வைத்தவை.
|