• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-30 17:28:29    
வட்டம் மற்றும் நகர்புறத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

cri
இவ்வாண்டின் முதல் ஐந்து திங்களில், சீனாவில், வட்டம் மற்றும் நகர்புறத் தொழில் நிறுவனங்கள் சீராக இயங்கியுள்ளன. சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள கூட்டு மதிப்பு பெறப்பட்டன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகமாகும்.
இன்று சீன வேளாண அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார்.
இவ்வைந்து திங்களில், வட்டம் மற்றும் நகர்புறத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதித்தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 20 விழுக்காடு அதிகம். இது, இத்தொழில் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றது. தவிர, இவ்வைந்து திங்களில், இத்தொழில் நிறுவனங்களின் தொழில் கட்டமைப்புச் சரிப்படுத்தல், சீராக முன்னேறுகின்றது. சுற்றுலாத் தொழிலை பிரதிநிதியாகக் கொண்ட சேவைத் தொழில் வேகமாகவும் சீராகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது, வட்டம் மற்றும் நகர்புறத் தொழில் நிறுவனங்கள், சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளன. கிராமங்களில், மிஞ்சிய உழைப்பு சக்திக்கு வேலை வாய்ப்பு வழங்குவது பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இவை முக்கிய பங்காற்றியுள்ளன.