• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-30 19:47:17    
சிங்ஹ-திபெத் ரயில் பாதை

cri
கடந்த ஆண்டு ஜூலை முதலாம் துவக்கம் இவ்வாண்டின் ஜூன் திங்களின் இறுதி வரை சிங்ஹ-திபெத் இருப்புப்பாதையில் இருபது லட்சத்து இருபதாயிரம் பேர் பயணித்துள்ளனர். ஒரு கோடியே பத்து லட்சம் டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றியிறக்கியது என்று சீன இருப்புப்பாதை சேவை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி கூறியது. இந்த இருப்புப்பாதை போக்குவரத்தில் இறங்கியது முதல், நெறி, சாதனம் நிர்வாகம் முதலியவற்றில் நான்கு காலாண்டுகளிலும் சோதனையில் நின்று பிடித்துள்ளது. பொறுப்பு ரீதியான விபத்து ஏதும் நிகழவில்லை. பயணிகளுக்கோ அதன் பணியாளர்களுக்கோ உயிர் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. பீடபூமி நோயால் அவர்களில் ஒருவரும் உயிர்துறக்கவில்லை என்று அமைச்சின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்” “வன விலங்குகளுக்கான பாதுகாப்புச் சட்டம்” உள்ளிட்ட சீனாவின் தொடர்புடைய சட்டங்களையும் சட்டவிதிகளையும் சிங்ஹ-திபெத் இருப்புப்பாதை கண்டிப்பான முறையில் கடைப்பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நிர்வாக நடவடிக்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.