திபெத்தில், குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாதம்
cri
நேற்று, சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் கிராமங்களில் குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாதத்துக்கான அமைப்பு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் துவங்கியது. திபெத் நிதி அலுவலகத்தின் புள்ளி விபரங்களின் படி, வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களில் வறுமையில் வாடும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இவ்வமைப்பு முறை உதவி வழங்கும். பொருளாதார வளர்ச்சி, அன்றாடத் தேவைப் பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்க்கைத் தரத்தின் உயர்வு ஆகியவற்றுடன், குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாத வரையறை உரிய முறையில் சரிப்படுத்தப்படும். 2002ஆம் ஆண்டில், கிராமங்களில், குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாதப் பணி திபெத்தில் நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|