• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 16:23:09    
விம்பிள்டன் டென்னிஸ் open போட்டி

cri

100 ஆண்டு வரலாறு கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் open போட்டி, 2007ம் ஆண்டு ஜூன் 25ம் நாள் பிரிட்டனில் மீண்டும் துவங்கியது. ரோலன் காரோஸ் என்றழைக்கப்படும் விளையாட்டுக்களரியிலிருந்து, பல்வேறு பிரபல டென்னிஸ் வீரர்கள்-வீராங்கனைகள் விம்பிள்டன் விளையாட்டுக்களரியை அடைந்தனர்.

முதல் நாளில், பிரபல ஸ்விட்சர்லாந்து வீரர் Roger Federer, அமெரிக்க வீரர் Roddick, ஜெர்மனியின் Haas ஆகியோர், எளிதாக தனது எதிராளிகளை 3-0 என்ற ஆட்ட கணக்கில் வென்று, அடுத்த சுற்றில் நுழைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவில், HENIN, Serena Williams, Hingis ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

2வது நாளில், Mauresmo, Sharapova, Jankovic ஆகியோர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் 3வது வீரர் Fishஐ, ஸ்பெயின் வீரர் நாடால், 3-0 என்ற ஆட்ட கணக்கில் தோற்கடித்தார்.

சீன வீராங்கனைகள், இப்போட்டியில், சீராக விளையாட வில்லை. 2வது நாளில், pengshuai, suntiantian இருவரும் தனது எதிராளிகளிடம் தோல்வியடைந்தனர். 3வது நாளில், yanzi, இத்தாலிய வீராங்கனை கால்பினிடம் 0-2 என்ற ஆட்ட கணக்கில் தோல்வியடைந்தார்.