ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் என்னும் பொது அறிவு போட்டியில் இந்திய நேயர் என் பால குமார் சிறப்புப் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பரிசு பெறுவதற்காக அவர் ஜுலை 3ம் நாள் அதிகாலை சிங்கப்பூர் வழியாக பெய்சிங் வந்தடைந்தார். தமிழ்ப் பிரிவின் தலைவர் தி. கலையரசி விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.
பரிசு வழங்கும் நடவடிக்கைக்குப் பொறுப்பான பணியாளர் லி லியின் வழிகாட்டலில் அவர் "தொழிலாளர் ஹோட்டலில்"தங்கியிருக்கிறார்.
காலை உணவு உட்கொண்ட பின் தமிழ்ப் பிரிவின் பணியாளர் மதியழகனின் உதவியோடு என் பாலகுமார் பெய்சிங் மாநகரில் சுற்றுபயணம் செய்கிறார்.
|