திபெத்தில் சமூக மீட்பு முறைமை
cri
கடந்த ஜுலை முதல் நாள், திபெத்தின் கிராமங்களில் குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாதத்துக்கான அமைப்பு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரத் துவங்கியது. இதன் மூலம், நகரங்களிலும், கிராமங்களிலும் சமூக மீட்பு முறைமை அதிகாரப்பூர்வ ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. திபெத்தில் இம்மீட்பு முறைமை, நகரவாசிகளின் குறைந்த பட்ச வாழ்க்கைத் தர உத்தரவாதம், கிராமவாசிகளின் குறைந்த பட்ச் வாழ்க்கைத் தர உத்தரவாதம் உள்ளிட்ட அமைப்பு முறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலிக மீட்பு மற்றும் சமூக உதவி இதை நிறைவு செய்கின்றது, நகர-கிராம மருத்துவ மீட்பு, கல்வி மீட்பு , சட்ட மீட்பு உள்ளிட்ட சிறப்பு மீட்புக் கொள்கைகள் இதற்கு இசைவானவை. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் உள் துறை அலுவலகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். 2006ஆம் ஆண்டின் இறுதி வரை, திபெத்தின் நகரங்களில் குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதத்துக்கான உதவித்தொகையைப் பெறுவோரின் எண்ணிக்கை, 44 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
|
|