வேளாண்மைக்கும் கிராமப்புறத்துக்கும் சமூக நிதி
cri
மேலதிகமான சமூக நிதி, வேளாண் துறைக்கும் கிராமப்புறத்திலுள்ள முக்கிய துறைகளுக்கும் ஈர்க்கப்படுவதற்காக, வேளாண்மைக்கு ஆதரவாக முதலீடு செய்யுமாறு வழிகாட்டுவதில் அரசின் பங்கைச் சீனா வெளிப்படுத்தவுள்ளது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டி அண்மையில் வெளியிட்ட "2007ம் ஆண்டு வேளாண்மைக்கு ஆதரவாக முதலீடு செய்வது பற்றிய அரசின் வழிகாட்டல்" என்ற ஆவணத்தில் இதை அறிவித்தது. இது தொடர்பான சீன அரசின் முதலீட்டுக் கொள்கை பற்றியும் நிதியின் முக்கிய முதலீட்டுத் துறை பற்றியும் இவ்வாவணம் தொகுத்து விளக்குகின்றது. இவ்வாண்டு, கிராமப்புறத்துக்கெனப் பயன்படுத்தப்படும் சீனாவின் நிலையான சொத்து முதலீட்டு அதிகரிப்பு அளவு, தொடர்ந்து கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும். கிராமப்புற உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்கான முதலீடும், மேற்கு பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான முதலீடும் கடந்த ஆண்டை விட அதிகமாகும் என்று ஆவணம் கூறுகின்றது.
|
|