• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-03 11:44:31    
சீனப் பாணி இனிப்பு உணவு வகை ஒன்று

cri

வாணி -- இந்தியாவில் இனிப்பு வகைகள் அதிகம். இன்று சீனப் பாணி இனிப்பு உணவு வகை ஒன்றை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

க்ளீட்டஸ் -- ஆமாம். இது சீன குவான் துங் மாநிலத்து shun de என்ற இடத்தின் பாரம்பரிய உணவு வகையாகும். வாணி, முக்கிய மூலப்பொருள் பால் தானே.

வாணி – ஆமாம். shun de இடத்தில் ஓரிரு பழைய உணவு விடுதிகளில் தான் தற்போது இந்த உணவு வகையை ருசிப்பார்க்கலாம். சரி, தேவையான பொருட்களை நான் எடுத்து கூறுகின்றேன்.

பால் அரை லிட்டர்

பிரட் 3 துண்டுகள்

முட்டை 1

கேரட் 1

உப்பு 3 கிராம்

உணவு எண்ணெய் போதிய அளவு 

வாணி -- முதலில், முட்டையின் மஞ்சற் பகுதியை வெள்ளை பகுதியிலிருந்து பிரிக்க வேண்டும். அவற்றை தனித்தனியாக நன்றாகக் கலக்க வேண்டும். வெள்ளை பகுதியில் உப்பை சேர்க்கவும்.

க்ளீட்டஸ் -- சுமார் 200 மில்லி பாலை, மாவுடன் கலக்கவும். பிறகு, முட்டையின் வெள்ளை பகுதியையும் இவற்றுடன் வலது புறமாக நன்றாக கலக்கவும்.

வாணி -- எஞ்சிய 300 மில்லி பாலை வாணலியில் ஊற்ற வேண்டும். இதனை கொதிக்க விடுங்கள். பிறகு, முன்பு தயாரித்துள்ள பால், முட்டையின் வெள்ளை பகுதி முதலியவற்றின் கலப்பில் ஊற்றவும். பிறகு நன்றாகக் கிளற வேண்டும்.

க்ளீட்டஸ் -- தற்போது, ஒரு தட்டையான ஆழமான பாத்திரம் தேவைப்படும். இதன் அடிப்பகுதியில் உணவு எண்ணெயால் லேசாக துடைக்க வேண்டும். பிறகு, அந்த பாலை இதில் ஊற்றி, மிதமான சூட்டில் சூடுபடுத்தலாம். சுமார் 6 நிமிடம் தேவை. பிறகு இறக்கி வைக்கவும். தட்டும் இதிலுள்ள பாலும் முற்றிலும் குளிராக மாறிய பின், இதனை குளிர் பெட்டியில் வைக்கவும். இது ஜெல்லியாக மாறும்.

வாணி -- பால் ஜெல்லியை 3 சென்டி மீட்டர் அகலம், 5 சென்டி மீட்டர் நீளமுடைய துண்டுகளாக வெட்டுங்கள். பிரட் துண்டுகளை அதே அளவுடையதாக நறுக்கவும். முட்டையின் மஞ்சள் பகுதியால், பால் தயாரிப்பையும் பிரட்டையும் இணைக்கவும். இவற்றின் மீது காரட், மல்லி ஆகியவற்றைக் கொண்டு அரங்கரிக்கலாம்.

க்ளீட்டஸ் -- இந்த உணவு வகை தயாராக இருப்பதாக தோன்றியுள்ளது. காரட், மல்லி ஆகியவற்றை சிறிதளவாக நறுக்க வேண்டும். இவை அலங்காரப் பொருட்களாக தான் பயன்படுத்தப்படும். அல்லவா?

வாணி -- ஆமாம். ஆனால், இன்னும் முடிவடையவில்லை. மேலும் ஒரு நடவடிக்கை தேவைப்படும். வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் போதிய அளவுடைய உணவு எண்ணெயை ஊற்றவும். மிதமான சூட்டில், பால் தயாரிப்புகளை தனித்தனியாக வறுக்க வேண்டும். இதன் நிறம் பொன்னாக மாறிய பின், இன்றைய உணவு வகை தயார்.

க்ளீட்டஸ் -- இனிப்பு சாப்பிட விரும்பும் நேயர்கள், இதனை கெட்டியான பால் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

வாணி -- ஆமாம். இந்த உணவு வகையைத் தயாரிக்கும் போது, குறிப்பாக, பால் கலப்பை ஆவியில் வேகவைக்கும் போதும், எண்ணெயில் வறுக்கும் போதும் மிதமான சூட்டில் வேகவைக்க வேண்டும். இதனைக் கவனியுங்கள்.

வாணி -- சரி, நேயர்களே, இந்த குவான் துங் மாநிலத்து தனிச்சிறப்புடைய இனிப்பை நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிப்பார்க்கலாம்.

க்ளீட்டஸ் -- வாணி, அடுத்த முறை எந்த வகை உணவு வகையை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?

வாணி -- அடுத்த முறை, இறால் சூப் தயாரிக்கவுள்ளோம். நேயர்கள் முன் கூட்டியே, இறால் 300 கிராம். சமையல் மது, இஞ்சி, கோழி கால் ஒன்று, முட்டையின் வெள்ளை பகுதி முதலியவற்றைத் தயாரிக்கலாம்.