• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-03 16:03:12    
பொருளாதார வளர்ச்சியில் நாடு

cri

க்ளிட்டஸ்:  கல்விக்கண் திறந்தால் நாட்டின் இருள் விலகும். பொருளாதார வளர்ச்சியில் நாடு முன்னேறினாலும் நாட்டின் முதுகெலும்பான கல்வி இல்லையெனில் அது கண்ணிரண்டும் இருந்தும் பயனில்லாதது போல். ஆகவே சீன அரசு கிராமப்புறத்தில் 14 வயது வரை இலவசக் கல்வி திட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். 14. 8 கோடி பேர் பயன் பெரும் இந்த பெரும் திட்டத்தை அனைவரும் வரவேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை: அடுத்து செய்திகளில் இடம்பெற்ற ஒரு தகவல் பற்றி முணுகப்பட்டு கண்ணன் சேகர் எழுதிய கடிதம். உலகச் சுற்றுலாத் துறையும், சீனச் சுற்றுலா பணியகமும் சீனாவில் தரமான தளங்களை தேர்வு செய்திருப்பதை அறிந்தேன். எழில் கொஞ்சும் இயற்கை நகரம், சுவையான விருந்து படைக்கும் நகரம், நவீன கலைகள் கொண்ட நகரம் என சீனாவின் நகரங்கலை, சிறந்த சுற்றுலா நகரங்களாக தேர்வு செய்தமை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சீனாவின் பெருமைக்கு இது மேலும் அழகு சேர்க்கும் என நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.


க்ளீட்டஸ்: அடுத்து பெரம்பலூர் உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியை பாராட்டி அவர் இப்படி எழுதுகிறார்:
பிப்ரவர் திங்கள் 5ம் நாள் முதல் மார்ச் திங்கள் 5ம் நாள் வரையில் இடம்பெற்ற சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியின் 5 பகுதிகளை செவிமடுத்தோம். சீன வரலாற்றில் இம்மாதங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கோடிட்டு காட்டும் அம்சம் சிறப்பானது. இதனை ஒலிப்பதிவு செய்து தனி புத்தகமாக அச்சிட்டு அடுத்த கருத்தரங்கில் வெளியிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம், உண்மையில் அது நிறைவேறும், புதிய நிகழ்ச்சிக்கு நன்றிகள்.


கலை: அடுத்து, மார்ச் திங்கள் இடம்பெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி ஆரணி ஜெ. அண்ணாமலை தெரிவித்த கருத்து.மன்றங்கள் துவக்க விழா மற்றும் நேயர் மன்றங்களின் பணிகள், கடமைகள் பற்றி மணமேடு தேவராஜாவும், கலையரசி அவர்களும் பயனுள்ள கலந்துரையாடலை கேட்டேன். மேலும் திங்கள்தோறும் ஒலிபரப்பாகும் சீன வரலாற்றுச் சுவடுகள் என்ற மீளாய்வு நிகழ்ச்சி ஒவ்வொரு நேயரும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சியாகும் என்று எழுதியுள்ளார்.
கிளீட்டஸ்……… வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
மே திங்கள் 15 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய முதலாவது 'செய்தித் தொகுப்பு' நிகழ்ச்சியின் மூலம் 'சீனாவில் நடைபெற உள்ள ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டம்' என்ற கட்டுரையைக் கேட்டேன். ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி உருவாக்கப்பட்டபின், ஆசிய நாடு ஒன்றில் முதன்முதலாக நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பயன்மிக்க நடவடிக்கைகள் பற்றி தெளிவான முறையில் இன்றைய கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன். ஆப்பிரிக்க நாடுகளின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் சீனாவில் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுவது மிகவும் பொருத்தமானதே. ஆப்பிரிக்க பொருளதார வளர்ச்சி வேகம் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில், பிற நாடுகளின் உதவி ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்றியமையாததாகிவிட்டது. எனவே, சீனா அளிக்கும் உதவி காலத்தே செய்யும் உதவியாகும். இதற்காக சீனாவிற்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கலை........ காங்கேய‌ம் பி. ந‌ந்த‌க்குமார்
செய்தி கேட்டேன். சீன பொருளாதர துறையில் ம‌ட்டும‌ல்ல த‌க‌வல் தொழில் நுட்ப‌த்திலும் தொட‌ர்ந்து முன்னேற்றம் க‌ண்டு வ‌ருகிறது என்ப‌த‌ற்கு சீனாவில் செல்லிட‌பேசி உப‌யோகிப்போரின் எண்ணிக்கை 48 கோடியை தாண்டி உள்ளது ஒரு சான்று. த‌ற்போது சீனாவில் 100க்கு30 பேரிடம் செல்லிட‌பேசி உள்ளது இன்னும் பெருகி சீனா த‌க‌வல் தொழிற்நுப‌த்தில் யா‌ரும் எட்ட‌முடியாத‌ இட‌த்தை பிடிக்கும் என்ப‌தில் எள்ள‌வும் ஐய‌மில்லை.


கிளீட்டஸ்.........மதுரை-20 என்.ராமசாமி
உலக செஞ்சிலுவை நாளான இன்று அன்பு காட்டும் வாரம் என்னும் நடவடிக்கை பெய்சிங்கில் துவக்கியுள்ளது. சமூக நன்கொடை திரட்டுவது அதிக தொழில் நிறுவனங்களை அறக்கட்டளை சமூக பணியில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுப்பது இதன் நோக்கமாகும். இவ்வன்பு வாரத்தில் விவசாயிகளின் நல பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தும். அன்புத் தொழில் கூட்டனி உருவாக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம் 5 கோடி யுவான் திரட்டியுள்ளது. இதில் 40க்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன என்ற செய்தி அறிந்தேன். சீனாவில் செஞ்சிலுவை சங்கம் பணி பாராட்டும் அளவில் வளர்ச்சி கண்டு உள்ளது. இது உலக அரங்கில் சீனாவிற்கு பெருமை சேர்ந்து உள்ளது.