வணக்கம் நேயர்களே. இன்றைய சீனப் பண்பாட்டு நிகழ்ச்சியில் சீனத் தேசத்தின் நாகரிகத்தை தோற்றுவித்த மூதாதையர் ஹாந்தியை வணங்குவது பற்றி கூறுகின்றோம்.

ஏப்ரல் 19ம் நாள் சீனச் சந்திர நாட்காட்டியின் படி 33ம் திங்களின் மூன்றாம் நாளாகும். அந்த நாள் சீனத் தேசத்தின் நாகரிகத்தை தோற்றுவித்த மூதாதையர் ஹாந்தியின் பிறந்த நாளாகும். இப்பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவருடைய ஊரான சீனாவின் ஹோநான் மாநிலத்தின் சின் ச்சுன் நகரில் பிரமாண்டமான நினைவு விழா நடைபெற்றது. வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வாழ்கின்ற 20 ஆயிரம் சீன மக்கள் விழாவில் கலந்து கொண்டு ஹாந்தியை வணங்கினர். விழாவில் சீனத் தேசத்தின் 5000 ஆண்டு கால நாகரிகம் மீளாய்வு செய்யப்பட்டது. எதிர்கால இன்பமான வாழ்க்கை மீதான ஆர்வம் வற்புறுத்தப்பட்டுள்ளது.

21 தடவை முழங்கிய மரியாதை பீரங்கி ஒலியுடன் மக்கள் ஹாந்தி சிலையை நோக்கி மெல்லமெல்ல முன்னேறி மலர் கூடையை மரியாதையுடன் சாத்தினார்கள். பிறகு அவர்கள் சாம்பிராணியை ஏற்றி ஹாந்தி சிலையின் முன்னால் நின்று வழிபட்டார்கள். சீனத் தேசத்தின் நாகரிகம் உலகில் மிக பழைய நாகரிகங்களில் ஒன்றாகும். பன்னெடுங்காலத்திற்கு முன்னரே ஹாந்தி சீனாவின் நடு பகுதியிலுள்ள பல்வேறு பழங்குடிகளை ஒன்றிணைத்தார். எழுத்துக்களை உருவாக்கி உற்பத்தி மற்றும் அன்றாட பயன்பாட்டு கருவிகளை கண்டுபிடித்து சட்டக் கட்டளை முறைமையை நிறுவுவதில் அவர் மக்களுக்குத் தலைமை தாங்கினார். ஹாந்தி அவர்களுடைய தலைமையில் சீனத் தேசம் நாகரிக காலத்தில் நுழைந்தது. ஆகவே ஹாந்தி சீன மக்களின் மூதாதையர் என கருதப்பட்டார். அவர்களின் அயரா உழைப்பு, இணக்கம், பொறுமை என்ற எழுச்சி இதுவரையிலும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற சீன மக்களை ஒன்றிணைக்கின்றது.

சீனாவில் புகழ் பெற்ற பண்பாட்டு அறிஞர் யு சியூ யூ இது பற்றி கூறினார்.
|