அணுக் கூட்டிணைவு வளர்ச்சிபோக்கு நிதான நிலையில் தொடர்ச்சியாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிப்பது இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகக் கடினமான பகுதியாகும். ஏனென்றால், அணுக் கூட்டிணைவு எரிபொருள் வேகவிடப்பட்டு, 40 கோடி முதல் 50 கோடி சதம பாகை வரையான வெப்பத்தை எட்டினால் தான், ஆற்றலைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தலாம். இந்தத் துறையிலான ஆய்வில் சீனா சில வெற்றிகளை பெற்றுள்ளதாக பேராசிரியர் wang yuan xi தெரிவித்தார். அவர் கூறியதாவது,

இத்தகைய வெப்பமான எரி பொருள்களை தாங்கவல்ல பாத்திரங்கள் இல்லை. காந்தப்புலம் மூலம் ஒரு காந்த பாத்திரத்தை உருவாக்கி அணுக் கட்டிணைவு எரிபொருளை வைப்பது போடுவது பற்றி ஆராய்ந்தோம் என்றார் அவர். இந்தப் புதிய தலைமுறை அணுக் கூட்டிணைவு ஆய்வு சாதனைத்தின் உயரம் 10 மீட்டருக்கு மேலானது. இது 8 மீட்டர் வட்டம் கொண்டது. உட்புறத்திலிருந்து வெளியில் காணப்படும் பகுதி வரை மொத்தம் 5 பகுதிகள் உண்டு. ஒவ்வொரு பகுதியும் வெப்பத்தைப் பாதுகாக்கும் பயன் தரும். இதன் மிக உட்புறத்தில் மேற்கூறிய காந்த பாத்திரம் உருவாக்கப்படலாம். இந்தச் சாதனம் நிதானமாக இயங்கும் போது, கூடிய அளவில் சுமார் 5 வினாடிக்கு ஒரு முறை 500 kilovol tampere மின்னோட்டம் பிறப்பிக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளில், இந்தச் சாதனம் 1000 வினாடிக்கு ஒரு முறை மின்னோட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று சீன அறிவியலாளர்கள் விரும்புகின்றனர்.

இந்தப் புதிய சாதனம் தயாரிப்பதில் சீனா முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், இதன் அடிப்படையில், தொடர்ச்சியாக இயங்கவல்ல ஒரு அணுக் கூட்டிணைவு உலையைக் கட்டியமைக்க வேண்டுமானால், அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் பல இன்னல்களை நீக்க வேண்டும். உயர் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலைத் தவிர, பெரும் அளவிலான நிதி ஆதரவும் தேவைப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு நாட்டின் தனி முயற்சி இதனை நிறைவேற்ற முடியாது. ஆகையால், கூட்டாக ஒத்துழைத்து, ஆராய்ச்சி செய்வது பற்றி பல நாடுகள் ஒத்த கருத்துக்கு வந்துள்ளன. 1985ம் ஆண்டு சமர்ப்பித்த சர்வதேச அனல் அணுக் கூட்டிணைவு ஆய்வு உலை பற்றிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்குவதென கடந்த ஆண்டு, சீனா, இந்தியா, ரஷியா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானித்துள்ளன. சீனாவின் புதிய தலைமுறை அணுக் கூட்டிணைவு ஆய்வு சாதனத்தின் வெற்றி, இந்த சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்துக்கு மேலும் மாபெரும் தொழில் நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது என்று சீன அறிவியல் கழகத்தின் துணைத் தலைவர் திரு bai chun li கூறினார்.\

உலகில் இதே வகை சாதனங்களை விட, எமது சாதனம் முதலில் இயங்குகின்றது. சர்வதேச அனல் அணுக் கூட்டிணைவு ஆய்வு உலைத் திட்டத்தில் சீனா சேருவதற்கு இது முக்கிய வாய்ப்பை வழங்குகின்றது என்றார் அவர். இந்தப் புதிய ஆய்வு சாதனம் சர்வதேச அறிவியல் ஆய்வு மற்றும் ஒத்துழைப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்புடைய ஒப்பந்தங்களின் படி, சிறப்புத் தரவு இணையம் மூலம், பல்வேறு நாடுகளின் அறிவியலாளர்கள் சீனாவின் அணுக் கூட்டிணைவு சாதனத்தை இயக்கலாம். அவர்கள் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி, இயற்பியல் ஆய்வு செய்யலாம். அணுக் கூட்டிணைவு மூல எரியாற்றலை சிவில் சேவையில் சேர்க்க அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சாதனத்தின் திட்டப்பணிக்குப் பொறுப்புடையவர்களில் ஒருவரான wu song tao கூறியதாவது

50 ஆண்டுகளுக்குப் பின் அணுக் கூட்டிணைவு எரியாற்றலை சாதாரண குடும்பங்களில் பயன்படுத்தப்படலாம். 50 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரையான காலத்தில், உலகில் புதிய அணு மின் நிலையங்களில் அணுக் கூட்டிணைவு தொழில் நுட்பம் பயன்படுத்தபப்டும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.
|