மி ஸிஜியன் என்பவர் தன்ஃபு மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்பதற்கு முன் யாங் சோ என்ற பெரியமனிதரைப் போய்ப் பார்த்து,"ஐயா, எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரிய மனிதர், "நான் எனது வாழ்நாள் முழுவதும் சாதாரண பதவியிலேயே இருந்திருக்கிறேன். நிர்வாகம் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஆனால் நீ வந்து கேட்கிறப்போ ஏதாவது சொல்லணும். மீன் பிடிக்கிறது பற்றி சொல்றேன் கேட்டுக்கோ" என்றார்.
அதிகாரி திகைத்து நின்றார்.
"மீன் பிடிக்கிறதா? அதுக்கும் நாட்டு நிர்வாகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?" என்று விழித்தார். பெரியவர் பேசத் தொடங்கினார்.
"தூண்டிலில் புழுவை மாட்டி ஏரித்தண்ணீரில் வீசும் போது ஒருமீன் உடனே வந்து அந்தம் புழுவைக் கடிக்கும். அந்த மீனை விட்டு பிடிக்காதே. அதுல கறி இருக்காது. குசியாகவும் இருக்காது. இன்னொரு மீன் வந்து வந்து தலையைக் காட்டி மறையும் புழுவைக் கடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணும். அது தான் சரியான மீன். கறியும் நிறைய இருக்கும். குசியாகவும் இருக்கும். அதைப் பிடிச்சிப் போடு."
"ஐயா, உங்க யோசனை அற்புதமானது" என்று பாராட்டி விட்டு அதிகாரி நகரிந்தார். அவர் தன்ஃபு நகருக்கு போகும் வழியிலேயே பல குட்டி அதிகாரிகள் பகட்டாக உடையணிந்து வந்து எதிர் கொண்டு அழைத்தநர். பலமான வரவேற்பும் விருந்தும் ஏற்பாடு செய்தனர்.
மி ஸி ஜியான் அவர்களை அலட்சியப்படுத்தினார். "போய்கிட்டே இரு. யாங் சோ சொன்ன சின்னமீன்கள் உடனே வந்து விட்டன" என்று தனது காரோட்டியிடம் சொன்னார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒதுக்குப்புறமாக சில முதியவர்கள் நின்று கொண்டிருந்தனர். மி ஸி ஜியன் அவர்களை அழைத்து மரியாதை செய்து நர்வாகப் பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தார்.
|