• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-04 15:04:17    
உலகப் பொருட்காட்சிக்கான ஷாங்காய் மாநகரின் ஆயத்தப் பணி

cri

2010ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி கிழக்குச் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும். பொருட்காட்சி துவங்குவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இருந்த போதிலும், ஷாங்காய் மாநகர் முன்னதாகவே, ஆக்கப்பூர்வமாக ஆயத்தம் செய்யத் துவங்கியுள்ளது. தற்போது, பல்வகை ஆயத்தப் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படுகின்றன.

2002ஆம் ஆண்டின் இறுதியில், உலகப் பொருட்காட்சியை நடத்தும் தகுதியை ஷாங்காய் மாநகர் பெற்றது. உலகப் பொருட்காட்சி வளரும் நாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

திட்டமிட்டப்படி, 200 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பொருட்காட்சியில் பங்கெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்குறிக்கோளை நனவாக்கினால், உலகப் பொருட்காட்சிகள் வரலாற்றில், இது மிக உயர்ந்த பதிவாகும். மார்ச் திங்கள் 27ஆம் நாள் வரை, இதில் கலந்து கொள்ள 125 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. பொருட்காட்சியின் அமைப்புக் கமிட்டி இதை எதிர்பார்க்கவில்லை. ஷாங்காய் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் துணைத் தலைவர் Zhou Han Min பேசுகையில், உலகில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு, இதற்கு ஒரு காரணமாகும். தவிர, "நகர வாழ்க்கையை மேலும் அருமையாக்குவது" என்ற இப்பொருட்காட்சியின் கருப்பொருள் இதற்கு மற்றொரு காரணமாகும் என்று கூறினார். இதற்கிடையில், இப்பொருட்காட்சியில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கப்பட்ட போது, பல வளரும் நாடுகளுக்கு பெரும் கவனம் செலுத்தப்பட்டது. இதனால், இப்பொருட்காட்சி உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார் அவர்.

"வளரும் நாடுகள் இப்பொருட்காட்சியில் பங்கெடுப்பதற்கென 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவியை சீனா வழங்குகின்றது. மிகவும் வளர்ச்சியடையாத வளரும் நாடுகள், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வளரும் நாடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உலகில் 114 ஆகும். இந்நாடுகள் பொருட்காட்சியில் பங்கெடுக்க விரும்பினால் அவற்றுக்கு சீனா காட்சி அரங்குகளை சீனா இலவசமாக வழங்கும்" என்றார், அவர்.

இவ்வாண்டின் இறுதியில், பொருட்காட்சியில் பங்கெடுக்கும் தரப்புகளின் எண்ணிக்கை, 170ஆக உயரும். சுமார் 7 கோடி பயணிகளை இப்பொருட்காட்சி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், உலகப் பொருட்காட்சி பூங்காவின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு இப்பூங்காவில் அடிப்படை வசதிகள், திடல்கள் அரங்குகள், இவற்றுக்கு இசைவான வசதிகள் ஆகியவற்றின் கட்டுமானம் துவங்கியது. 2009ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவை அனைத்தும் கட்டிமுடிக்கப்படக் கூடும் என்று மதிப்பிடப்படுகின்றது.

திட்டமிட்டப்படி, 450 மீட்டர் அகலமுடைய Huang Pu Jiang ஆற்றின் இரு கரைகளிலும், உலகப் பொருட்காட்சி பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பு, 5.28 சதுர கிலோமீட்டர் ஆகும். இத்தகைய மாபெரும் திட்டத்தை உலகப் பொருட்காட்சி பணியகம் வெகுவாக பாராட்டுகின்றது.

திட்டத்தின் படி, உலகப் பொருட்காட்சி பூங்காவில் உள்ள சுமார் 18 ஆயிரம் குடும்பங்களும், சுமார் 300 தொழில் நிறுவனங்களும் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டியிருந்தன. உலகப் பொருட்காட்சிக்கான துவக்கக் கட்ட ஆயத்தப் பணிகளில், மக்களின் குடிபெயர்வு, மிகப் பெரிய இன்னலாக இருந்தது. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், தற்போது, நகரவாசிகள், புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். "நகர வாழ்க்கையை மேலும் அருமையாக்குவது" என்ற நடவடிக்கையில் முதல் தொகுதி நலன் பெற்றோராக அவர்கள் மாறினர். முன்பு, அவர்களின் குடும்ப உறைவிட பரப்பு சுமார் 30 சதுர மீட்டர் மட்டுமே. அவர்களுக்கென புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு நகர்ந்த பின், குடும்ப உறைவிட பரப்பு, இரு மடங்காகியுள்ளது. தவிர, அவர்கள் புதிய வீடுகளை வாங்குவதற்கு அரசு உதவித்தொகையை வழங்கியுள்ளது.

 குடிபெயர்ந்த மக்கள்

50 வயதுக்கு மேலான Zhang Jin Liu அம்மையாரின் குடும்பத்தில் 7 பேர் இருக்கின்றனர். முன்பு அவர்கள் 78 சதுர மீட்டர் பரப்புடைய வீட்டில் வாழ்ந்தனர். இப்போது, அவர்களுக்கு 2 செட் வீடுகள் வழங்கப்பட்டன. வீடுகளின் மொத்த பரப்பு சுமார் 170 சதுர மீட்டர் ஆகும். Zhang Jin Liu அம்மையார் இது பற்றி கூறியதாவது:

"எங்கள் முயற்சியைச் சார்ந்திருந்தால், புதிய வீட்டில் குடியமர சில பத்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அரசின் உதவித்தொகையினால், இத்தகைய நவீனமயமாக்க குடியிருப்புப் பகுதியில் தற்போது வாழ்கின்றேன்" என்றார், அவர்.

நகரவாசிகளின் குடிபெயர்வைத் தவிர, பழைய தொழில் நிறுவனங்களின் இடம்பெயர்வுப் பணியும் மிகவும் முக்கியமானது. 1913ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Pu Dong இரும்புருக்கு தொழிற்சாலை, ஷாங்காய் மாநகரின் பெரிய ரகத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். 200க்கும் அதிகமான ஹெக்டர் நிலப்பரப்புடைய இத்தொழில் நிறுவனம், இடம்பெயர வேண்டிய தொழில் நிறுவனங்களில் மிகவும் பெரியதாகும். Huang Pu Jiang ஆற்றின் கரையோரத்தில் உள்ள இடத்திலிருந்து, ஷாங்காய் மாநகரின் வடபகுதியில் உள்ள Bao Shan பிரதேசத்துக்கு இது இடம்பெயர்க்கப்படும்.

இத்தகைய பெரும் இடப்பெயர்வுப் பணியினால், Pu Dong இரும்புருக்குத் தொழிற்சாலைக்கு, தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்துவதினால் இழப்பு ஏற்படக்கூடும். இருந்த போதிலும், இடப்பெயர்வுக்குப் பொறுப்பான இத்தொழிற்சாலையின் பொறுப்பாளர் Chen Xiang Ting பேசுகையில், இடப்பெயர்வினால், வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் கருதுவதாக கூறினார். புதிய இடத்தில், புதிய தொழில் நுட்பங்களும், புதிய சாதனங்களும் உற்பத்திப் போக்கில் பயன்படுத்தப்படும். உருக்குதல் எளிதாக்கப்பட்டு, உற்பத்திச் செலவும் சுற்றுச்சூழலுக்கான பாதிப்பும் மேலும் குறைக்கப்படும் என்று கூறினார். அவர் கூறியதாவது:

"நீண்டநோக்கில், குடியேற்றத்தினால் தொழில் நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் வளர்ச்சி வாய்ப்பு ஏற்படுகின்றது. புதிய தொழிற்சாலையின் நிலப்பரப்பு, பழைய தொழிற்சாலையின் நிலப்பரப்பைப் போல் இரு மடங்கு ஆகும். உலகில் மிக முன்னேறிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். உற்பத்தி பயன் உயர்வு. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். தவிர, தொழில் நுட்பத்தின் புத்தாக்கத்தின் மூலம், உற்பத்தி பொருட்களின் தரம் உயரும். கூட்டு மதிப்பு உயரும்" என்றார், அவர்.

தற்போது, பூங்காவில் 95 விழுக்காட்டு தொழில் நிறுவனங்கள் தங்கு தடையின்றி வேறு இடங்களுக்கு வெளியேறியுள்ளன. இடம்பெயர்ந்து வருகின்ற Pu Dong இரும்புருக்குத் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இவ்வாண்டுக்குள் இடப்பெயர்வுப் பணியை நிறைவேற்றும்.

உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஷாங்காய் மாநகரின் துணை மேயர் Yang Xiong மனநிறைவு அடைகின்றார். அவர் கூறியதாவது:

"உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணியில் அரசு கவனம் செலுத்துகின்றது. சர்வதேசச் சமூகம் இதற்கு உற்சாகமான மறுமொழி அளிக்கின்றது. இதற்கிடையில், ஷாங்காய் மாநகரவாசிகள் உள்ளிட்ட நாட்டவர் அனைவரும் இதற்கு முழுமூச்சுடன் ஆதரவளிக்கின்றனர். இம்மூன்று காரணிகளினால், உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன" என்றார், அவர்.