• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-10 14:35:16    
ஹுவாந்தி

cri

உலகில் பல்வகை தேசிய இன மக்கள் பரவியுள்ளனர். அவர்கள் எங்கே அலைந்து சென்றாலும் மூதாதையர்கள் விட்டுச் சென்ற சுவர், கல் போன்றவற்றை மறக்காமல் மனதில் வைப்பார்கள். ஆண்டு தோறும் பிறந்த இடத்துக்குத் திரும்பி வழிபட விரும்புகின்றார்கள். இது எழுச்சி மீதான எதிர்பார்ப்பு உண்மையில் சீனாவில் ஒவ்வொரு குடும்பமும் தத்தம் மூதாதையரை வழிபாடு செய்யும். இன்று கோடானுகோடி குடும்பங்களின் படையல் அரங்குகள் தேசிய இனத்தின் படையல் அரங்காக உருவாக்கப்பட்டன. பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் ஹாந்தியை அனைவரும் வழிபட்டுப் போற்றினர் என்று அவர் கூறினார்.


இந்த வழிப்பாட்டு நடவடிக்கையில் சீனப் பெருநில பகுதி மக்கள், ஹாங்காங் மகௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளில் வாழ்கின்ற சீன மக்கள், சீனர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோராக 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். சீனக் கோமின் தான் கட்சியின் கௌரவ தலைவர் லியான் ச்சான் துணைவியுடன் விழாவில் கலந்து கொண்டார். அத்துடன் அவர் ஹாந்தி சிலையின் முன்னால் சாம்பிராணி ஏற்றி மலர் கூடை ஒன்றை சாத்தினார். செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது அவர் கூறியதாவது.

ஹோநான் சீனத் தேசத்தின் பண்பாடு உருவாகிய இடங்களில் ஒன்றாகும். குறிப்பாக எங்கள் தேசிய இனத்தின் பொது மூதாதையர் ஹாந்தி பிறந்த ஊராக இது விளங்குகின்கிறது. வாய்ப்பை பெற்று ஹாந்தியை வழிபாடு செய்யும் விழாவில் கலந்து கொள்வதன் மூலம் பல ஆண்டுகளாக கொண்டுள்ள எனது ஆர்வம் நனவாக்கப்பட்டது என்று கூறினார்.
வழிபாட்டு விழாவில் ஹோநான் மாநிலத்தின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் வுவான் சியேன் சூ வழிபாட்டு வாசகத்தை வாசித்தார். சீனாவை வலிமைப்படுத்துவதற்கான சீன மக்களின் விருப்பத்தை அவர் தெரிவித்தார்.
ஹோநான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வுவான் லி சுன் வழிபாட்டு விழாவில் உரையாற்றுகையில் நாகரிகம் வளரும் முன்னேற்ற போக்கில் பின்னடைவு ஏற்படக் கூடும். இன்னல்களால் அல்லல்படுத்தப்படக் கூடும் என்று கருத்து தெரிவித்தார். சுய வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற தேசிய எழுச்சி கொண்டுள்ள சீன மக்கள் இன்னல்களை நீக்கி இன்பமான வாழ்க்கை உருவாக்குவார்கள் என்றார் அவர்.

பாரம்பரிய பண்பாட்டின் மைய கருத்துக்கள் மாறாது. எடுத்துக்காட்டாக சுய வலிமைக்காக விடா முயற்சி செய்வதென்ற தேசிய எழுச்சி ஹாந்தி காலத்திலிருந்து இன்று வரை தலைமுறை தலைமுறையாக நிலவி வந்திருக்கிறது. எங்கள் நாட்டின் பொருளாதாரம் 20க்கும் அதிகமான ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சியடைந்த இப்போது கூட இந்த எழுச்சி எங்களுக்கு இன்னமும் தேவை என்று வுவான் லி சுன் கூறினார்.