எல்லோருக்கும் கனவு இருக்கிறது. ஆனால், கனவு, செயல் மற்றும் முயற்சியின் மூலமே, நிறைவேற்றப்பட முடியும் என்று என்னுடைய கனவு என்னும் இசை நடனம் வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.
சீன ஊனமுற்றோர் கலைக் குழு, ஒரு சிறப்பு குழுவாகும். குழுவின் உறுப்பினர்கள், உயிரையும் அமைதியையும் விரும்புகின்றனர். பெர்லினில் ஆயிரம் கைகளை கொண்ட தேவி எனும் நடனம், சந்திரன் எனும் பியானோ இசை, நண்பர் என்னும் பாடல் ஆகியவற்றை அவர்கள் அரங்கேற்றினர். நிகழ்ச்சி நேரம் குறைவாக இருந்தாலும், சீன ஊனமுற்ற கலைஞர்கள் வெளிக்காட்டிய நம்பிக்கையும், சுய வலிமைக்கான எழுச்சியும் கண்டுரசித்த சீன மற்றும் ஜெர்மனி ரசிகர்களின் நினைவில் நின்றது. ஜெர்மனியிலுள்ள சீனத் தூதர் மா சாய் ழுன் அரங்கேற்றத்துக்கு முன் உரை நிகழ்த்தினார். சீன ஊனமுற்றோர் கலைக் குழுவை நன்றாக அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது
ஊனமுற்றோர்கள், பண்பாடு, கலை, விளையாட்டு முதலிய துறைகளில், மற்றவர்களை போலவே உச்ச சாதனைகளை பெற முடியும் என்று இக்குழுவின் கலைஞர்களின் தலைசிறந்த அரங்கேற்றம் மெய்ப்பித்துள்ளது என்று அவர் பாராட்டினார். நேயர்கள் இது வரை, சிறப்பான நடனக் கலைஞர் தைய் லி குவா பற்றிய சீன மகளிர் என்னும் நிகழ்ச்சியை கேட்டீர்கள். மீண்டும் சந்திப்போம்.
|