• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-10 14:35:16    
செல்லிட பேசி வைரஸ் தடுப்பு

cri
கணிணி இணையத்தில் ஏற்பட்ட வைரஸ் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். கணிணி வைரஸைத் தடுக்கும் வகையில், அறிவியல் ஆய்வாளர்கள் பல்வகை தொழில் நுட்பங்களையும் உற்பத்தி பொருட்களையும் புதிதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், வைரஸ் தொழில் நுட்பமும் இடைவிடாமல் வளர்ந்து வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளில், இடம்பெயரும் கொல்லி என்னும் செல்லிட பேசி வைரஸ் தோன்றியது முதல், இதுவரை, 300க்கும் அதிகமான செல்லிட பேசி வைரஸ் வகைகள் பதிவு செய்யப்பட்டன. இது மட்டுமல்ல வாரத்துக்கு 2 அல்லது 3 புதிய வகைகளுடன் வைரஸ் பரவியுள்ளது. செல்லிட பேசி வைரஸ் விரைவில் உலக அளவில், பரவக் கூடும் என்று நிபுணர்கள் முன் கூட்டியே எச்சரித்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், செல்லிட பேசி வைரஸ் தடுப்பு பற்றிய தொழில் நுட்பத்தை எடுத்து கூறுகின்றோம்.

 
தற்போது, செல்லிட பேசி மக்களின் வாழ்க்கையில் இன்றியயமையாத ஒரு பகுதியாகியுள்ளது. செல்லிட செய்திகள் மக்களுக்கு அதிக வசதி கொண்டு வரும். அதே வேளையில், புதிதாகத் தோன்றியுள்ள செல்லிட பேசி வைரஸ்களில் உள்ளார்ந்துகிடக்கும் சீர்குலைவுத் தன்மையும் மறைமுகத் தன்மையும், செல்லிடச் செய்தி வளர்ச்சிக்கு நிழல் தந்துள்ளன. வைரஸ் தொற்றிய பின், செல்லிட பேசியில் எத்தகைய பாதிப்பு தோன்றும்? செய்தித் தொடர்புப் பொறியியலாளர் shi wen yong இது பற்றி கூறியதாவது,


செல்லிட பேசி முற்றிலும் இயங்க முடியாது என்பது கடுமையான வைரஸ் பாதிப்பில் ஒன்றாகும். அடுத்து, செல்லிட பேசியை மீண்டும் மீண்டும் இயங்கச் செய்யும் நிலை ஏற்படும். 3வதாக, செல்லிட பேசியிலான விசைப்பலகைகள் செயல்படாமல் பயனற்றுப்போகும். குறுந்தகவல்களைக் கூட அனுப்ப முடியாது. மனிதருக்குத் தொல்லை செய்யும். தவிரவும், சில வேளைகளில் செல்லிடபோசி கூடுதலாக மின்னாற்றலை வீணாக்கும். ஒரு வாரமாகப் பயன்படுத்தக் கூடிய மின்கலம் ஒரு நாளுக்குள்ளே செலவிடப்படும் என்பதைக் கண்டறியலாம் என்றார் அவர்.

 
2000ம் ஆண்டு, ஸ்பேயினின் ஒரு செய்தி கூட்டு நிறுவனத்தின் நகர்வு செய்தித் தொடர்புத் தொகுதி வைரஸால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்துவோருக்குக் குப்பை செய்திகளை அனுப்பியது. உண்மையான செல்லிட பேசி வைரஸ் 2004ம் ஆண்டில் தோன்றியது. Cabir என்னும் பூச்சி வைரஸ் nokiaவின் s 60 ரக செல்லிட பேசி மூலம் பரவியது. blue booth திறனைப் பயன்படுத்தும் செல்லிட பேசிகளை இந்த வைரஸ் இடைவிடாமல் தேடி தாக்கியது. இதுவரை, இந்த வைரஸும் இதன் மாற்று வகையும் 10க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவின.


ஆனால், செல்லிட பேசி பயன்படுத்துவோர் பலர் வைரஸ் தடுப்பு அறிவு உணர்ந்து அறிய இல்லை. சீனத் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் wang ru fei இது பற்றி கூறியதாவது,