• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 11:19:49    
ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான்

cri

ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஜுலை 4ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. விழாவில் சீன வானொலி நிலையத்தின் துணைத் இயக்குனர் சன் மின் யி இப்போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற பத்து நேயர்களின் பெயரை அறிவித்தார். அவர்கள் இந்தியா, அமெரிக்கா, மங்கோலியா, வியட்நாம், ஜெர்மனி, இத்தாலி, மொராக்கோ, ஈரான், ரஷியா, ருமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் ரோ ஹௌ சேய் அவர்களுக்கு பரிசுக் கோப்பையையும் சான்றிதழையும் வழங்கினார்.




சீன வானொலி நிலையம் மற்றும் சீனாவின் ஸ்ச்சுவான் மாநில அரசின் கூட்டு ஏற்பாட்டில் ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவு போட்டி கடந்த நவம்பர் திங்களில் துவங்கியது. கடந்த 5 திங்களில் 43 மொழிகளில் வானொலி மற்றும் இணைய தளங்களின் மூலம் பல்வேறு நாடுகளில் வாழ் சீன வானொலி நேயர்களுக்கு ஸ்ச்சுவான் மாநிலத்தின் செழுமையான சுற்றுஸீ மூல வளங்கள், எழில் மிக்க இயற்கைக் காட்சி இடங்கள், பல்வகை வடிவங்களிலான நடையுடை பாவனைகள் உள்ளிட்ட அறிவு ஊட்டும் தகவல்கள் கட்டுரைகளின் மூலம் அறிமுகப்பட்டுத்தப்பட்டன. மொத்த 400 மணி நேரம் நீடித்த நிகழ்ச்சிகளை கேட்ட நேயர்கள் விறுவிறுப்பாக போட்டியில் பங்கெடுத்து விடைத்தாட்களை அனுப்பினர். 142 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 6 லட்சத்து 70 ஆயிரம் விடைத்தாட்கள் சீன வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. தமிழ் நேயர்கள் அனுப்பிய ஒரு லட்சத்து 60 ஆயிரம் விடைத்தாட்கள் இதில் முக்கிய விகிதம் வகித்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றோம். ஆகவே பாண்டிச்சேரி என் பால குமார் தமிழ் நாட்டின் நேயர்களின் சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டார். விழாவின் போது செய்தியாளர் கண்ட பேட்டில் என் பால குமார் பேசினார்.





இன்றைய பண்பலை ஒலிபரப்பு காலத்தில் நாங்கள் வானொலி மூலம் நிகழ்ச்சிகளை கேட்பதன் மதிப்பு உயர்ந்துள்ளது. மக்கள் எங்களை மென்மேலும் பாராட்டியுள்ளார்கள். காரணம் என்னவென்றால் தொலைக் காட்சியை நேரடியாக பார்ப்பது எளிமையானது. வானொலி கேட்பதும் இணைய தளத்தில் படிப்பதும் கடினமானது என்பது மக்கள் எங்களுக்கு மதிப்பளிப்பதன் காரணமாகும். பரிசு பெற்று தாய்நாட்டுக்குத் திரும்பிய பின் நேயர்கள் அனைவருக்கும் இணையத் தளத்தை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய தொழில் நுட்ப அறிவை கற்பிப்பது என் மாபெரும் ஆசையாகும். இதை நிறைவேற்ற நான் முன்பை விட முயலுவேன் என்று கூறினார். பரிசளிப்பு விழாவில் ருமேனிய நேயர், மொராக்கோ நேயர் இருவரும் சிறப்புப் பரிசு பெற்ற 10 நேயர்களின் சார்பில் உரைநிகழ்த்தினர். ருமேனிய நேயர் திரு துமிட்ரா மாரின் கூறியதாவது.





ருமேனியாவும் சீனாவும் சகோதர நாடுகளாகும். ருமேனியா வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட போது சீன அரசு ருமேனிய மக்களுக்கு பெரும் உதவி வழங்கியது. இந்த சர்வதேச எழுச்சி என்னை ஊக்குவித்துள்ளது. நான் மின்சார பொறியாளராக வேலை செய்கின்றேன். தொடர்ந்து சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டுவருகின்றேன். ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலம் என்னும் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு ஸ்ச்சுவான் மாநிலம் பற்றிய அறிவை கற்றுக் கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் சீன ருமேனிய நட்புறவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறினார்.




குறுகிய ஒரு மணி நேரமான பரிசளிப்பு விழாவில் சிறப்பு பரிசு பெற்ற பத்து நேயர்களும் ஒன்றிணைந்து ஒரு பெரிய குடும்பத்தினரை போல் பழகினார்கள். ருமேனிய நேயர் துமிட்ரா மாரின், மொராக்கோ நேயர் இட்ரிஸ் வாட்டினா அவர்களின் உரைக்கு அவர்கள் மனமார்ந்த மதிப்பு அளித்தனர்.
இரவு சீன வானொலி இயக்குனர் வுவாங் கங் நியன் சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களுக்கு விருந்து அளித்தார். ஜுலை 6ம் நாள் சிறப்புப் பரிசு பெற்ற நேயர்கள் ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொள்வார்கள்.