• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 11:10:11    
ஹுவாங் சான் மலையின் அழகான இயற்கை காட்சிகள்

cri

ஹுவாங் சான்னின் ஒவ்வொரு மலையிலும், பல்வேறு உருவரைவான கற்பாறைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலவை, 10 லட்சத்துக்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன் உருவாயின. வெவ்வேறான கோணங்களிலிருந்து பார்த்தால், வேறுபட்ட உருவரைவுகளை எடுத்துக்காட்டியுள்ளன. ஹுவாங் சான் மலையின் பெய்ஹேய் என்ற பகுதியிலுள்ள SHI XIN என்னும் மலையில், குரங்கு போன்ற ஒரு பெரிய கல், செங்குத்தான பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த கல் குரங்கு, மேக கடலைப் பார்ப்பது போல், காட்சியளித்தது. இதனால், இக்காட்சி, மேக கடலைப்பார்க்கும் குரங்கு என்ற பெயர் அழைக்கப்பட்டுள்ளது.


ஹுவாங் சானின் மலைகளில் நடந்து போகும் போது, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பயணியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஷாங்காய்யில் பிறந்து, கனடாவில் குடிபெயர்ந்த திரு WANG LI CHANG பேசுகையில், ஹுவாங் சான் மலை, தாம் கனவிலும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விரும்பிய இடமாகும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இளம் வயதில், ஹுவாங் சான் மலை சென்று பார்க்க விரும்பினேன். ஆனால், வாய்ப்பு இல்லை. ஹுவாங் சான் மலையை, சீனத் தேசம் விட்டுச்சென்ற தலைச்சிறந்த பண்பாட்டு மரபுச் செல்வமாகவும், புதுப்பிக்கவல்ல மூலவளமாகவும் கருதுகின்றேன். இதற்கு நான் மிகவும் பொருமை அடைகிறேன் என்றார் அவர்.


ஜப்பானிய பயணியர் YUKI SUENAGA அம்மையார் எமது செய்தியாளரிடம் பேசுகையில், ஒரே மாதிரியான பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால், சீனாவின் புகழ்பெற்ற மலைகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஜப்பானிய பயணியர் விரும்புகின்றனர். இதில், ஹுவாங் சான் மலை, தென்மேற்கு சீனாவின் சிசுவான் மாநிலத்திலுள்ள E MEI மலை ஆகியவை, ஜப்பான் பயணியரால் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

 
ஜப்பானிய மக்களைப் பொறுத்தவரை, ஹுவாங் சான் மலை, ஈர்ப்பு ஆற்றல் மிக்கது. ஓவியத்தைப் போன்ற மலையையும் ஊற்றையும் ஜப்பானிய மக்களுக்கு மிக பிடிக்கும். இன்று ஹுவாங் சானின் கற்பாறைகள், தேவதாரு மரங்கள் முதலியவற்றைப் பார்த்து, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளேன் என்றார் அவர்.
தேவதாரு மரங்கள், கற்பாறைகள் ஆகியவை, ஹுவாங் சானில் ஆயிரத்துக்கணக்கான ஆண்டுகளில் மாறாத அழகான இயற்கை காட்சியாக இருக்கின்றன. இங்குள்ள மேகக்கடல் காட்சியைப் பார்க்க விரும்பினால், பயணியரின் பாக்கியத்தைச் சார்ந்திருக்க வேண்டும். பொதுவாக கூறின், ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் திங்கள் முதல், அடுத்த ஆண்டின் மே திங்கள் வரை, ஹுவாங் சானில் மேக கடற்காட்சியைக் கண்டு ரசிப்பதற்கு மிகவும் நல்ல காலமாகும். குறிப்பாக, மழை அல்லது பனி பெய்த பிறகு, மேக கடற்காட்சி மிகவும் அழகானது. பிரிட்டிஷ் பயணியர் JOHN PASDEN, இந்த முறை மேக கடற்காட்சியைப் பார்க்க முடிய வில்லை. இதற்காக அவர் கொஞ்சம் வருத்தமடைந்தார். ஆனால் தாம் மீண்டும் ஹுவாங் சான் செல்ல விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

 
சீனாவின் தலைச்சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாக, ஹுவான் சான்னில், அழகான இயற்கைக்காட்சியும், பசுமையான காற்றும் உள்ளன. இலையுதிர்காலத்திலும் அல்லது குளிர்காலத்திலும் நான் மீண்டும் வந்து, மேக கடற்காட்சியைப் பார்ப்பேன் என்றார் அவர்.