• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-06 16:23:36    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நுழைவுச்சீட்டு பற்றிய விற்பனை பணி

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய முதலாவது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பணி, ஜூன் திங்கள் 30ம் நாள் நிறைவடைந்துள்ளது. புள்ளிவிபரங்களின் படி, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி 7 லட்சத்துக்கு அதிகமான முன்பதிவுப் படிவங்களைப் பெற்றுள்ளது. நுழைவுச்சீட்டுகளை வாங்க விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழா, நிறைவு விழா போன்றவற்றின் முன்பதிவு நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை வெளிப்படையாக விற்பனை செய்யும் எண்ணிக்கையைப் பெரிதும் தாண்டியுள்ளது. ஆகவே, இந்நுழைவுச்சீட்டுகள் சீட்டெடுப்பு மூலம் நிர்ணயிக்கப்படும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி செய்த பணி குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான நிர்வாகத் தலைவர் Felli தெரிவித்தார்.