• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-12 16:51:54    
பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம்

cri
ச்சுபோ நகர் ஈராயிரம் ஆண்டுகால வரலாறுடைய சிறிய நகரமாகும். பாரம்பரிய நாட்டுப்புறக் கலையிலக்கியமான இசை நாடகம், லியோ ச்சாய் என்னும் இசை, மன் சியான் ஞு கூற்றுகள் போன்ற பொருள் சாரா பண்பாடுகள் நகரில் பரவியுள்ளன. அவை சீன அரசு நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாக திகழ்கின்றன.


நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இசை "யூன் ச்செய் தேவி" என்னும் நகைச் சுவை இசை நாடகத்தின் ஒலியாகும். ச்சுபோ நகரில் மிக தனிச்சிறப்பியல்பு மிக்க உள்ளூர் இசை நாடகமாக அழைக்கப்டும் "வூ யின் நாடகம்"3000 ஆண்டுகளுக்கு முன் பரவியது. சாந்துங் யாங்கெ என்னும் ஆடல், குவாக் கு இசை நாடகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இசை நாடகம் வளர்ந்தது. துவக்கத்தில் ஒரு முறை 5 நடிகைகள் இணைந்து இந்நிகழ்ச்சியை அரங்கேற்றினர். ஆகவே "5 ஒலி இசை நாடகம்"என இது அழைக்கப்பட்டது. சீனாவின் மற்ற சிறிய இசை நாடகங்களை போல "வூ யின் இசை நாடகத்தை"கைக்கொண்டு வளர்ப்பது இன்னல்களை எதிர்நோக்குகின்றது. இன்னலிலிருந்து விலகச் செய்யும் வகையில் ச்சுப்போ நகரின் வூ யின் இசை நாடக குழு "கிராமப்புறப் பாரம்பரியத்தை கைகொண்டு நகரங்களில் வளர்ப்போம்"என்ற முழக்கத்தை முன்வைத்து. "வூ யின் இசை நாடகத்தை"பரவ பாடுபட்டுள்ளது. இசை நாடகக் குழுத் தலைவர் சன் சியாங் கூறியதாவது

ஒவ்வொரு வசந்த விழாவின் போதும் விவசாயிகள் வீட்டில் இருக்கும் போது நாங்கள் கிராமப்புறத்துக்குச் சென்று அவர்களுக்கு நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றோம். விழா நாட்களில் 100 முறை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறோம். நகரங்களில் இளைஞர்கள் மாணவர்கள் ஆகியோருக்கென நாங்கள் நிகழ்ச்சியை அரங்கேற்றுவோம். சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, இசை, மொழி ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் ரசிகர்களுக்குச் சேவை புரிகின்றோம். இந்த முயற்சியின் மூலம் எங்கள் நாட்டுப்புற இசை நாடகம் நகரங்களில் வளர முடியும் என்றார் அவர்.
2006ம் ஆண்டில் " வூ யின் இசை நாடகம்"சீனாவின் முதலாவது தொகுதி அரசு நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்த இசை நாடகத்தை பாதுகாத்து வளர்ப்பதற்குப் புதிய வாய்பு வழங்கப்பட்டது. 
நீங்கள் கேட்டு கொண்டிருப்பது "பொன் லாய் விருந்து"என்னும் லியோ ச்சாய் இசையாகும். இந்த இசை நூற்றுக்கு நூறு நாட்டுப்புற இசையாகும். லு பை ச்சி என்னும் முதியோரால் இது பாடபட்டது. அவருக்கு வயது 83. 400 ஆண்டுகால வரலாறுடைய லியோ ச்சாய் இசை சிங் வம்சகாலத்தில் பண்பாட்டு இலக்கிய படைப்பாளர் புன் சுன் லிங்ஙால் இசைக்கப்பட்டது. சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றி இந்த இசை வர்ணிக்கின்றது. இதுவரை உள்ளூர் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் விருப்பமும் பாடுவதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் மக்களின் பொழுதுப்போக்கு வடிவம் செழுமையாகியது. லியாச்சாய இசையை பாடக் கூடியவர்கள் மேன்மேலும் குறைந்துள்ளனர். இந்த நிலைமையில் பூச் சியா கிராமத்தின் தலைவர்கள் ஓய்வு நேரத்தில் லியோ ச்சாய் பாடல்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கிராம வாசிகளை அணிதிரட்டினர்.


ஒவ்வொரு கிராம வாசியும் சில லியாச்சாய் பாடல்களை பாட வேண்டும். அத்துடன் பாடல் போட்டி நடத்தி பரிசு வழங்குகிறோம். மெல்ல மெல்ல அனைவரும் லியாச்சாய் ராகத்தை அறிந்து கொண்டுள்ளனர். தவிர இசை நாடக குழுக் ஒன்றையும் நிறுவியுள்ளோம் என்றார் கிராம நிர்வாகி பூ சான் சன்.
நீங்கள் கேட்டு கொண்டிருப்பது ச்சுப்போ நகரில் உள்ள ச்சுன் சியா ச்சுவாங் கிராம வாசிகள் பாடிய "மன் சியான் ஞு பெருஞ்சுவரில் அழுகிறார்"என்னும் பாடலாகும். மன் சியான் ஞு திருமணம் முடிந்த முதல் நாளிரவில், பெருஞ்சுவரை கட்டியமைக்க அவரது கணவர் வான் சீ லியான் கைது செய்யப்பட்டு மன் சியான் ஞுயை பிரிந்து சென்றார். பின் கணவரை தேடிபார்க்க மன் சியா ஞு பெருஞ்சுவரின் அடிவாரத்திற்குச் சென்றார். கணவர் மரணமடைந்த செய்தியை கேட்ட பின் துன்பப்பட்டு ஓங்கிக் குரலெடுத்து அழுத்தால் பெருஞ்சுவர் இடிந்து விட்டது என்று கதை கூறுகின்றது. இதை வர்ணிக்கும் பாடல்கள் அதிகம். கிராம வாசிகள் இவற்றை பாடி முடிக்க அரை நாள் போதாது.

 
சமூகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்ததுடன் பண்பாட்டு மரபுச் செல்வத்தை பாதுகாக்கும் உணர்வு மக்களிடையில் படிப்படியாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பிலான தடைகளும் படிப்படியாக தீர்க்கப்படும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சீனத் துணை பண்பாட்டு அமைச்சர் ச்சோ ஹொ பின் தெரிவித்துள்ளார்.