சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 3வது தொல் பொருள் கள ஆய்வு பணி இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. திபெத் தொல் பொருட்களின் இருப்பை தெளிவுபடுத்தி, அரசு, தன்னாட்சி பிரதேசம் மற்றும் பல்வேறு நிர்வாக இடங்களிலுள்ள தொல் பொருள் பதிவேட்டு கிடங்கையும் தொல் பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முழுமையாக்குவது இந்த கள ஆய்வின் நோக்கமாகும் என்று இன்று தன்னாட்சித் தலைநகர் லாசாவில் நடைபெற்ற அணிதிரட்டல் கூட்டத்தில் எமது செய்தியாளர் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை 5 ஆண்டுகள் நீடிக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருள் சிதிலங்கள் இந்த நடவடிக்கையில் முக்கியமாக கவனிக்கப்படும் என்று திபெத் தொல் பொருள் பணியகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் விவரித்தார்.
|