தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா இடமான தாலி நகரம் அமைந்துள்ளது. இந்த எழளில் மிக்க தாலி நகரின் இயற்கைக் காட்சி, வரலாற்றுச் சிறப்பிடம். தேசிய இனங்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவை மேன்மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளன. தாலி நகரில் மிகப் பிரபல இயற்கைக் காட்சி, சான்சாங் மலை மற்றும் ஆல்ஹை கடலாகும். சான்சாங் மலையின் சிகரம் 4100 மீட்டருக்கும் மேலாகும். அதனை ஒட்டியமைந்துள்ள சில மலைகளின் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.

சான்சாங் மலையின் அடிவாரத்தில் பரந்த ஆல்ஹை கடல் உள்ளது. அது, தெற்கிலிருந்து வடகே ஏறக்குறைய 42 கிலோமீட்டர் நீளமும் கிழக்கிலிருந்து மேற்கே 3 முதல் 9 கிலோமீட்டர் அகலமும் உடையது.
|