ஒரு சிறப்பான நடனக் கலைஞரை அறிமுகப்படுத்துவது
cri
நீங்கள் கேட்டுகோண்டிருப்பது, விழிப்புயனற்ற பாடகர் யாங் ஹாய் தௌ பாடிய சீன பாப் பாடலன சொர்க்கம் என்னும் பாடலாகும். ஜெர்மன் ரசிகர்கள், இந்த பாடலின் உள்ளடக்கத்தை நன்றாக புரிந்துக்கொள்ள முடியாமல் போனாலும் அவருக்கு நீண்ட கரவொலி ஏற்படுத்தி பாராட்டினர். யாங் ஹைய் தௌ தனது இனிமையான குரல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ரசிகர்களிடையில் செல்வாக்கு பெற்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், இசையை பிடிக்கும். இசை, எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, குழந்தை காலத்தில் எனக்கு ஒரு கனவு உண்டு, பாடல் புகழ் வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். சூரியானை காண முடியா விட்டாலும் யாங் ஹைய் தௌவின் மனதில் சூரியன் உண்டு. சீனாவில் அவர், சொர்க்கத்தின் பாடகர் என்று அழைக்கப்படுகிறார். உடலில் உள்ள குறைபாடுகள், பாடல் கொண்டு வரும் மகிழ்ச்சியை காட்டிலும் மிக சிறியதே. ஜெர்மன் மொழியில் பாட கற்று கொண்டுள்ளேன் பாடலாம் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார். அவர் பாடிய பாடலை கேருங்கள்
செவிப்புலனற்ற வாய் பேசமுடியாத நடிகர் சௌ லீ காங், அரங்கிலான ஒரு முக்கிய நடிகராவார். அவர், தைய் லீ வாவுடன் கூட்டாக பட்டாம்பூச்சியாக அரங்கேற்றினார். சீனாவின் ரொமிஒ மற்றும் ஜூரியேவின் துன்பமான காதல் கதையை இந்நடனம் விளக்கிக் கூறுகிறது. அரங்கு, நான் என்னை வெளிகாட்டும் மேடையாகும். அரங்கின் நடுவன் பகுதியில் நிற்கின்ற போதும் எல்லோரும் என்னை பார்க்கும் போதும், நான் முழுதும் நாடகத்தில் மூழ்கினேன் என்றார் அவர். அரங்கேற்றம் முடிவடையும் போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று, நீண்டநேரம் கைதட்டி பாராட்டினர். ஜெர்மன் ரசிகர், உர்லிசி லல்வு செய்தியாளரிடம் கூறியதாவது
அரங்கேற்றம், என்னை வியப்பில் ஆழ்த்தியது குறிப்பாக, ஊனமுற்றோரின் அரங்கேற்றம் சிறப்பானது. இவர்கள் மற்ற மக்களை விட வேறுப்பட்டவர்கள் ஆனால்,அவர்களின் அரங்கேற்றம் உண்மையாக தலைசிறந்தது என்று அவர் பாராட்டினார்.
|
|