வெளிநாடுகளுக்கான சீனாவின் முதலீடு
cri
சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப் பணி, புதிய வளர்ச்சி கட்டத்தில் நுழைந்துள்ளது. வெளிநாடுகளுக்கான முதலீடு, புதிய சுற்று வெளிநாட்டு ஒத்துழைப்பில் முக்கிய பணியாக மாறியுள்ளது. சீனத் துணை வணிக அமைச்சர் Liao Xiao Qi கூறியுள்ளார். மூன்றாவது கிழக்காசிய முதலீட்டுக் கருத்தரங்கில் பேசிய அவர், வெளிநாடுகளில் சீனா முதலீடு செய்வது, வேகமாக அதிகரித்து வரும் கட்டத்தில் நுழைந்துள்ளது என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில், வெளிநாடுகளுக்கான நேரடி முதலீட்டுத் தொகை, ஆண்டுக்கு 71 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும், வெளிநாட்டு முதலீடு ரீதியில், புதிதாக தோன்றியுள்ள வல்லரசாக சீனா திகழ்கின்றது என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு இறுதி வரை, 160க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில், சீனாவின் மொத்த நேரடி முதலீட்டுத் தொகை, 7330 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. தற்போது, கிழக்காசிய நாடுகளில், சீனாவின் முதலீட்டுத் தொகை, 370 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இந்நாடுகள், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு சீனா ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது.
|
|