• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-15 17:31:57    
Guang Xi-ஆசியான் வர்த்தகம்

cri

இவ்வாண்டின் முற்பாதியில், தென் மேற்கு சீனாவின் Guang Xi சுவான் இன தன்னாட்சி பிரதேசத்துக்கும், ஆசியானுக்குமிடை வர்த்தகம் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் அதிகரித்து வந்தது. புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முற்பாதியில், Guang Xiக்கும், ஆசியானுக்குமிடை மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 110 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
புள்ளி விபரங்களின் படி, ஆசியான் நாடுகளில், வியட்நாம் இன்னமும் Guang Xiயின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.
சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கம் விரைவாக நடைபெறுவதுடன், அவற்றுக்கிடை இரு தரப்பு வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, "சீன-ஆசியான் பன்முக பொருளாதார ஒத்துழைப்பு கட்டுக்கோப்பு உடன்படிக்கையின் சரக்கு வர்த்தக உடன்படிக்கையை" சீனாவும், ஆசியான் நாடுகளும் செயல்படுத்தி, வரி குறைப்பு திட்டத்தை பன்முகங்களிலும் துவக்கியது. சீனாவையும், ஆசியானையும் இணைக்கும் பாலமான Guang Xi, ஆசியானுடனான வர்த்தகம் சீராக வளர்ந்து வருகின்றது.