• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 18:07:55    
ஒரு வகை இறால் சூப்

cri

க்ளீட்டஸ் – வாணி. இன்று ஒரு வகை இறால் சூப் தயாரிப்போம். அல்லவா?

வாணி – ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் செய்யப்படும் உணவு வகைக்கு இறால், கோழி முதலியவைத் தேவைப்படுகின்றன.

க்ளீட்டஸ் – தேவைப்படும் பொருட்களை நீங்கள் முழுமையாக தெரிவிக்கவும்.

வாணி – சரி. நான் சொல்கின்றேன்.
தோல் இல்லாத இறால் 300 கிராம்

மாவு 10 கிராம்

சமையல் மது 15 கிராம்

உப்பு 5 கிராம்

இஞ்சி போதிய அளவு

கோழி கால் 1

முட்டையின் வெள்ளை பகுதி

வெங்காயம் 1

க்ளீட்டஸ் – முதலில், வாணலியை அடுப்பின் மீது வைத்து இதில் ஒரு லிட்டர் நீரை ஊற்றி கோழி காலை வேகவைக்க வேண்டும். தொடர்ந்து 40 நிமிடம் மதிமான சூட்டில் வேகவிடுங்கள்.

வாணி – இன்று நாம் தயாரிப்பது சூப் ஆகும். ஆகையால், இது முதல் கட்டம். பிறகு, கோழி காலை வெளியே எடுக்கலாம்.
இறால்களை நன்றாக சுத்தம் செய்து, குறிப்பாக, இதன் முதுகிலுள்ள கறுப்பு நிற பொருளை நீக்க வேண்டும்.

க்ளீட்டஸ் – வேகவைக்கப்பட்ட கோழி அவ்வளவு வெப்பமாக இல்லாத போது, இதனை கைகளால் துண்டு துண்டாக நறுக்கிக்கொள்ளவும். கோழித் தோலை மெல்லிய நூல்போல நறுக்கலாம்.

  இறால்கள்

வாணி – இங்கே, ஒரு குறிப்பு, இந்திய மக்கள் கோழி தோலைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சீனாவில் கோழி வறுவலில் தோல் அடிக்கடி இடம்பெறுகின்றது. ஆகையால், இந்த சூப்பில் தேவையில்லை என்றால் கோழி தோலை நீங்கள் புறக்கணிக்கலாம்.

க்ளீட்டஸ் – இறாலை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு இதனை அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அரைத்த இறாலோடு சமையல் மது, 2 கிராம் உப்பு, மாவு, முட்டையின் வெள்ளை பகுதி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

வாணி – அரைத்த இறாலை சிறிய பந்துகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு, மேலும் ஒரு வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் நீர் ஊற்றி, நேரடியாக இறால் பந்துகளை தனித்தனியாக வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடத்துக்குப் பின், இறால் பந்துகளின் நிறம் சிவப்பாக மாறும். இப்போது, அவற்றை நீரிலிருந்து வெளியே எடுக்கலாம்.
முன்பு தயாரித்துள்ள கோழி சூப்பில் கோழி இறைச்சி, இறால் பந்து, கோழித் தோல், முதலியவற்றைக் கொட்டி, மேலும் 4 நிமிடங்கள் வேகவிடுங்கள்.

க்ளீட்டஸ் – சூப்பை வேக வைக்கும் போது, நீங்கள் வெங்காயத்தை மிக சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இறுதியில் எஞ்சிய உப்பையும் வெங்காயத்தையும் சூப்பில் கொட்டலாம்.

வாணி – அன்புள்ள நேயர்களே, இப்போது சுவையான இறால் சூப் தயார்.

கோழி கால்

க்ளீட்டஸ் – வாணி, சில நேயர்கள் கடிதங்கள் மூலம் தமிழகத்தில் சீன உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வாங்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

வாணி --இது ஒரு பிரச்சினை அல்ல. ஏனென்றால், வேறுபட்ட இடங்களில் வேறுபட்ட காய்கறிகள், பழங்கள், இறைச்சி வகைகள் முதலியவை இருக்கின்றன. ஆகையால், வேறுபட்ட உணவு வழக்கங்கள் உருவாகி, தனிச்சிறப்பு வாய்ந்த உணவு பண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்திய உணவும், சீன உணவும் உலகில் மிகப் புகழ்பெற்ற உணவு வகைகளாகும். எமது நிகழ்ச்சியின் மூலம் நேயர்கள் சீன உணவுகளை ஓரளவில் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

க்ளீட்டஸ் – வசதி இருந்தால், நீங்கள் சில வகை உணவுகளை தயாரிக்கலாமே.

வாணி – சரி, அடுத்த வாரம், ஒரு வகை பிரியாணி பற்றி எடுத்து கூறுவோம். நேயர்கள், கொத்து கறி, அரைத்த இறைச்சி emulsion, சிவப்பு முள்ளங்கி, celery, காய்ந்த சிறிய இறால் ஆகியவற்றை முன்கூட்டியே தயாரிக்கலாம்.