• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 16:10:21    
சிலர் நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. தமிழகத்தில் கோடைக்கால விடுமுறையை குதூகலமாக கொண்டாடிய குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லத் துவங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறோம். இன்றைய நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்வதோடு, இந்த கல்வியாண்டில் மாணவச் செல்வங்கள் சிறப்பாக பாடங்களைக் கற்று நல்லபடி தேர்ச்சியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.


க்ளீட்டஸ்: நிகழ்ச்சிகளைக் கேட்டு தவறாமல் கடிதங்கள் மூலமாகவும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் கருத்துக்களை அனுப்பிவரும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள். நிகழ்ச்சியின் முதல் கடிதம் இலங்கை காத்தான்குடி எம். எம். ஃபாத்திமா மிஃப்ரா எழுதியது. பள்ளி மாணவி என்ற வகையில் சீன வானொலியில் இடம்பெறும் அறிவிய சார் நிகழ்ச்சிகளை அதிகமாக கேட்கிறேன். சீனக்கதை நிகழ்ச்சியும் சுவையாக உள்ளது. எனது கடிதங்களுக்கு நீங்கள் அனுப்பும் பதில் மகிழ்ச்சியள்க்கிறது. சீன வானொலிக்கு வாழ்த்துக்கள் கூறுவதோடு, உங்கள் சேவை மென்மேலும் வளரவேண்டும் என்று இறைவனிடம் பிரார்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை: அடுத்து தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி குறித்து திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். என்ன சிந்திப்பது என்பதைக் காட்டிலும், எப்படி சிந்திப்பது என்பதை கற்பிப்பதை கலிவியின் நோக்கமாகக்கொண்டு சீன வானொலி நிகழ்ச்சியை வாங்கி வருகிறது. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி, நேயர்களே சுயமாக சிந்திப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளதை உணரமுடிகிறது, சிறப்பாக உள்ளது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து மேட்டூர் அன்பர் அ. மோகன ரமேஷ் எழுதிய கடிதம். அண்மையில் என் நண்பர் க. மணிவர்மன் அவர்களை நீண்டகாலத்திற்கு பிறகாக சந்தித்தேன். அந்த சந்திப்பு கடல் கடந்த ஒரு நாட்டில் எனக்கு ஒரு நட்பை ஏற்படுத்தப்போகும் சந்திப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சீன வானொலியின் தமிழ் பிரிவை பற்றி திரு. மணிவர்மன் அனக்கு அறிமுகப்படுத்தினார். சலிப்போடுதான் ஒரு நாள் வானொலியை நான் இந்த அலைவரிசையை தேடி கண்டுபிடித்தேன். ஆனால் அதற்கு பின், எப்படி இவர்களால் முடிகிறது என்று வியந்தேன். சீன வானொலியின் செய்தித்தொகுப்பு, மக்கள் சீனம், உணவு அரங்கம், கதை, நேயர் நேரம், சின மகளிர் மேலும் நேயர்களை ஊக்குவிக்க பரிசுப் போட்டி, சீனப்பயணம் என்று பல நிகழ்ச்சிகளை அறிந்து வியந்தேன். தமிழ்ப்பிரிவின் நேயராக ஏன்னையும் ஏற்ற்க்கொண்டு, நேயர் எண் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

 
கலை: அன்பர் மோகன ரமேஷ் அவர்களே உங்களை சீன வானொலிக் குடும்பம் அன்போடு வரவேற்கிறது. தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து, அறிவியல். கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து, உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். மீத்தேன் வாயு பற்றி 11ம் 12ம் வகுப்புகளில் அறிவியல் பாடத்தில் படித்திருந்தாலும், மனிதருக்கு நன்மை தரும் மீத்தேன் வாயு என்ற நிகழ்ச்சியின் மூலம் புத்தகங்களில் இல்லாத தகவல்களை கேட்டு புரிந்துகொண்டோம். விவசாயிகளுக்கு நன்மை தரும் வாயுவாக மீத்தேன் பயன்படுகிறது என்ற தகவலைக் கேட்டு மகிழ்ச்சியுற்றோம். தற்போது மீத்தேனின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவது பாராட்டுக்குரியது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து மங்கோலி தவூல் இன மக்களின் வாழ்க்கை பற்றிய சீன மகளிரி நிகழ்ச்சி குறித்து துரையூர் குறிஞ்சிக்குமரன் எழுதிய கடிதம். மங்கோலிய தவூல் இன மக்கள் ஒற்றுமையுடனும், நட்புறவுடனும் வாழ்கின்றனர் என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற கூற்றுக்கிணங்க வாழ்கின்றனர். சாரா அம்மையார் பல பதவிகளை வகித்துள்ளார். அவரது தொழில் நிறுவனம் நன்கு வளர்ந்து வருகிறது, அவர் மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். அவரது நம்பிக்கையும், செயல்களும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கலை: தொடர்ந்து இலங்கை காத்தான்குடி ஜே. எம். ரஹ்மி எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக உள்ளன. அனைவருக்கும் பயந்தரக்கூடியதாக உள்ளன. பொது அறிவுப்போட்டி என்பது நல்ல விடயம். மாணவர்களுக்கு இத்தகைய போட்டிகளின் மூலமான தகவல்கள் பயன் தரும் என்று கூறியுள்ளார்.


க்ளீட்டஸ்: அடுத்து சீனப்பண்பாடு நிகழ்ச்சியில் வசந்த விழா, சீன மக்களின் மிகப்பெரிய விழா, பண்பாட்டின் அடையாளமா உள்ளது என்பதை அறிந்தோம். நிகழ்ச்சியில் கூறப்பட்ட பழங்கதையில், வெடி மூலம் ராட்சத விலங்கை முதியவர் விரட்டியடித்ததைக் கேட்டு அவரது புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்ந்தோம் என்று ஈரோடு வெங்கம்பூர் அன்பர்கள் வி. பி. குமார் மற்றும் வி. பி. நல்லசிவம் எழுதியுள்ளனர்.
கலை: அதே நிகழ்ச்சி குறித்து 30 பள்ளிப்பட்டி பி. ஆர். சுப்ரமணியன் எழுதிய கடிதத்தில் வசந்த விழா பற்றிய நிகழ்ச்சியை கேட்டேன், வசந்த விழாவின்போது பட்டாசுகள் வெடித்து மகிழும் வழமை எப்படி தோன்றியது என்பதை அறியத் தந்தீர்கள். மகாபாரதத்திலும் இது போல ஒற்றுமையுள்ள கதை உண்டு. பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் இதே போல், ஒரு ஊரையே அழித்த அரக்கனை அழிப்பான். இரு கதைகளிலும் மூதாட்டிகள் வருகின்றனர். இரு கதைகளிலும் ஒரு ஊரையே அரக்கன் ஆட்டிப்படைக்கிறான். சீன இந்திய பண்பாடுகளில் இது போல ஒற்றுமைகள் இருப்பது சிறப்பு என்று எழுதியுள்ளார்.