• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-17 16:23:04    
செல்லிடபேசி பயன்பாட்டில் கவனத்துக்குரிய சில பிரச்சினைகள்

cri

செல்லிட பேசி வைரஸில் மக்கள் கவனம் செலுத்தவில்லை. செல்லிட பேசியில் இயங்கும் திறனில், குறுந்தகவல் அனுப்புவது, பேசுவது ஆகியவை வைரஸால் பாதிக்காமல் இருக்கலாம் என்று எண்ணுகின்றேன் என்றார் அவர்.
செல்லிட பேசி வைரஸ் பற்றியும், வைரஸ் பரவல் வழிமுறை பற்றியும் பலர் wang ru fei போல அறிந்து கொள்ளவில்லை. Wang qin tian xia என்னும் மென்பொருள் கூட்டு நிறுவனத்தின் சந்தை துறை மேலாளர் லீ இது பற்றி எடுத்து கூறியதாவது,
செல்லிட பேசி வைரஸில் முக்கியமாக 2 வகைகள் இருக்கின்றன. ஒரு வகை இணையம் மூலம் பரவல் செய்கின்றது. மற்றொரு வகை, blue tooth, நினைவு அட்டை, முதலியவை மூலம் பரவல் செய்கின்றது என்றார் அவர்.


கணிணி வைரஸ் போல், செல்லிட பேசி வைரஸ் மக்களுக்கு இன்னல்களை ஏன் கடும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம். செல்லிட பேசி வைரஷை எப்படி தடுப்பு என்பது பற்றி, பெய்ஜிங்கின் கபாஸ்க்கி அறிவியல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனத்தின் துணைத் தொழில் நுட்ப இயக்குநர் gao yi wei கூறியதாவது,
கணிணியின் வைரஸ் தடுப்பு தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, செல்லிட பேசி வைரஸ் தடுப்புத் தொழில் நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. வைரஸைத்தடுப்பதையும் கையாள்வதையும் ஒட்டுமொத்தமாக இணைத்தால், செல்லிட பேசியின் பாதுகாப்பு முற்றிலும் எங்கள் கட்டுபாட்டில் இருக்கும் என்றார் அவர்.


பதிப்புரிமை வாய்ந்த வைரஸ் ஒழிப்பு மென் பொருளைப் பதிவிறக்கம் செய்வது தவிர, செல்லிட பேசி வைரஸ் தடுப்பில் கவனத்துக்குரிய சிலவற்றையும் நிபுணர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். முதலில், செல்லிட பேசியிலுள்ள blue booth, infra-red முதலிய அனுப்பு திறனை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, பொது இடங்களில், இந்த திறனைப் பயன்படுத்தும் போது, செல்லிட பேசி அமைப்பை மறைமுக வடிவத்தில் வைக்க வேண்டும். இனம் தெரியாத குறுந்தகவல்களை கண்ட படி திறக்க கூடாது. தேவைப்பட்டால், இந்தக் குறுந்தகவலைத் திறக்காமல் நீக்கலாம். அபாயத்தை தவிர்க்கும் வகையில், செல்லிட பேசியில் வைரஸ் ஒழிப்பு மென் பொருளைப் பொருத்த வேண்டும்.

தற்போதைய வைரஸ் செல்லிட பேசியின் வன்பொருள்களைப் பாதிக்காது. பாதிக்கப்பட்டு இருந்தால், பாதுகாப்புத் தொகுதியை புனரமைத்து, செல்லிட பேசியின் திறனை மீட்கலாம். ஆனால், செல்லிட பேசியில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் இழக்கக் கூடும் என்பது கவனிக்கத்தக்கது.