• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-18 18:09:55    
உலகில் சீனாவின் விண்வெளி அளவீட்டு மற்றும் கட்டுப்பாட்டு துறை

cri

சீனாவின் Xi An செயற்கைக்கோள் அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு மையம், வெளிநாட்டுக்கு தொழில் நுட்பத்தை வழங்குவது, வெளிநாட்டு செயற்கைக் கோள்களுக்கு அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு ஆதரவு அளிப்பது, வெளிநாட்டு அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு தொடரமைப்புடன் இணைவது முதிலியவற்றின் மூலம், பல்வேறு உலக நாடுகளுடன் ஒத்துழைப்பு நல்கியுள்ளது என்று அதன் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
Xi An செயற்கைக்கோள் அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சீனச் செயற்கைக் கோள் அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு தொடரமைப்பிற்கான தகவல் நிர்வாகம், ஆணை, கட்டுப்பாடு உடைய நிறுவனமாகும். விண்வெளி அளவீடும் கட்டுப்பாடும், இன்றைய உளகின் அறிவியல் தொழில் நுட்பத்தின் உயர் நிலைத் துறைகளில் ஒன்றாகும். சீனா முற்றிலும் சொந்த ஆற்றலைச் சார்ந்து, விண்வெளி அளவீடு மற்றும் கட்டுப்பாட்டில் சர்வதேச ரீதியில் முதல் தரம் என்ற இலக்கை நனவாக்கியுள்ளது. சர்வதேச விண்வெளி ஏவு சந்தையில் சீனா நுழைந்த பின், இம்மையம், 20க்கும் அதிகமான வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களுக்கு நம்பகமான சரியான அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு ஆதரவை வழங்கி, உலகில் சீனாவின் விண்வெளித்துறைக்கு நல்லபுகழை ஈட்டித் தந்துள்ளது என்று செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.