போர் தந்திரங்களைத் தீட்டுவதில் சீனர்கள் கெட்டிகாரர்கள். அதற்குக் குறியீடாகப் பல கதைகள் உள்ளன.
ஒருநாள் காட்டுவழியே சென்ற ஒருவன் இரண்டு புலிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டான். "அந்த மனிதனை யார் தின்பது" என்று அந்தப் புலிகளுக்கு இடையே போட்டி. இரண்டும் கடுமையாக போதிக் கொண்டன. பாய்ந்து பாய்ந்து தாக்கின. புலிப் பாய்ச்சல் லேசாகவ இருக்கும். அந்த வழியே குவான் சுவாங்ஸியும் அவருடைய நண்பரும் வந்தனர். ஒரு மனிதனுக்காக இரண்டு புலிகள் சண்டையிடுவதைக் கண்ட குவான் சுவாங்ஸி, கத்தியை எடுத்து ஒரு புலியைக் குத்த முற்பட்டார். அப்போது நண்பர் தடுத்து நிறுத்தினார்.
"கொஞ்சம் பொறு. ரெண்டு புலிகளில் ஒரு புலி சின்னது. அதுக்கு அவ்வளவா பலம் கிடையாது. பெரிய புலி அதை நிச்சயம் அடிச்சிக் கொன்றுவிடும். அது வரைக்கும் பொறுமையா இரு. சின்னம்புலி செத்தாலும், பெரிய புலிக்கு உடம்பெல்லாம் காயமாகி அதுவும் பலவீனமாகி விடும். அப்போ நீ பெரிய புலியை ரொம்ப சுலபமா குத்திக் கொல்லலாம். நீ சொல்றது என்னமோ ஒரு புலியை ஆனா ரெண்டு புலிகளைக் கொன்ற பெருமை உனக்குக் கிடைக்கும். எப்படி? ஒரே வேட்டையில் இரட்டைப் புலிகள்" என்று சொல்லிச் சிரித்தார்.
|