• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-19 14:58:11    
யுன்னான் மாநிலத்தின் கற்காடு பற்றி

cri
அண்மையில் நியுசிலந்தில் நடைபெற்ற 31வது உலக மரபுச் செல்வ மாநாட்டில், சீனாவின் யுன்னான் மாநிலத்திலுள்ள கற்காடு, குவேய் சோ மாநிலத்தின் லீ போ, சுவாங்ஜிங் மாநகரத்தின் வூ லுங் ஆகியவை சேர்ந்து விண்ணப்பிக்கும் தென் சீனாவின் கர்ஸ்ட் எனப்படும் சுண்ணாம்புப்பாறைகளின் அரிமானம் கொண்ட பிரதேச இயற்கைக் காட்சி, பரிசீலனை செய்யப்பட்டு, உலக மரபுச் செல்வ பெயர் பட்டியலில் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது, சீனாவின் 34வது உலக மரபுச் செல்வமாக மாறியது. அடுத்து, கற்காட்டில் மூன்று இயற்கைக் காட்சி இடங்களைப் பார்ப்போம்.

 
கற்காடு, தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன் மிங் நகரத்தைச் சேர்ந்த ஷிலின் யீ இனத் தன்னாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மலைச் சரிவு, பள்ளத்தாக்கு மற்றும் வடி நிலத்தில், பெரிய மற்றும் சிறிய கற்காடுகள் உள்ளன. வழிகாட்டி பீ ஹுவா யுன் அம்மையார் கூறியதாவது: 
கற்காட்டு இயற்கைக் காட்சி மண்டலத்தின் மொத்த பரப்பளவு, 12 சதுர கிலோமீட்டராகும். சீனாவிலும் உலகவிலும் மிகப் பெரிய கண்ணாம்பு பாறை அரிமாணம் கொண்ட புவி வடிவமாகும். பொதுவாக, பயணிகள் நடந்து சென்று, பெரிய கற்காடு, சிறிய கற்காடு ஆகிய பகுதிகளைப் பார்வையிடுகின்றனர். இங்கே, கற்களும், கிளை பாதைகளும், அதிகமாக இருக்கின்றன. கற்காட்டில், சுமார் 400 கிளைப் பாதைகளும், 200க்குக் கூடுதலான காட்சி இடங்களும் காணப்படலாம். இது, பாதைப் புதிர் என்று அழைக்கப்பட்டது என்றார் அவர்.


கற்காடு என்பது, பாறைகளால் உருவாக்கப்பட்ட காடு ஆகும். பெரிய கற்காடு என்னும் பகுதி, முழு இயற்கைக் காட்சி மண்டலத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது, பிரதிநிதித்துவத்தன்மை மற்றும் மிகவும் பழமை வாய்ந்த இயற்கைக் காட்சி இடமாகும். இங்கே, தாமரைப்பூ சிகரம், வாள் குளம், கத்தி மலையும் தீக் கடலும் என்ற கல் சிகரம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற காட்சி இடங்கள் உள்ளன.
வாங் பொஃங் மணிமண்டபம், கற்காட்டைப் பார்த்து ரசிப்பதற்கு, மிகவும் நல்ல இடமாகும். ஷாங்காயிலிருந்து வந்த பயணி நீ னி எமது செய்தியாளரிடம் பேசுகையில், கற்காட்டில் சுற்றுலா மேற்கொண்டதால், தாம் வியப்படைந்ததாக கூறினார். அவர் கூறியதாவது: 
இது, மிகவும் அழகானது. வாங் பொஃங் மணிமண்டபத்தில் நின்று, கீழே பார்த்தால் பகுதிப்பகுதியான கற்களைப் பார்க்கலாம். இது, மிகவும் அற்புதமான இயற்கைக் காட்சியாகும் என்றார் அவர்.
பெரிய கற்காடு, அடர்ந்த கல் சிகரங்களால் உருவாக்கப்பட்டது. இங்கே கல் சிகரங்களும், கற்தூண்களும், தனிச்சிறப்பியல்புடையவை. கற்காட்டிலுள்ள சில கற்கள், அதிசய ஓசையை எழுப்பலாம் என்று, வழிகாட்டி பீ ஹுவா யுன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:


இந்த கல், தட்டப்பட்டால், மணி ஒசையை எழுப்பலாம். இதனால், இக்கல், மணிக்கல் என்ற பெயர் பெற்றுள்ளது என்றார் அவள்.
சிறிய கற்காட்டுப் பகுதியில், அஷிமா என்னும் கல் தூண், மிகவும் புகழ்பெற்றது. இந்த கல் தூண், யீ இனத்தின் செவிவழிக் கதையிலுள்ள அழகான கன்னி அஷிமாவை போன்றது. தற்போது, சிறிய கற்காட்டுப் பகுதியில், விளக்குகள் அதிகமாக உள்ளன. இரவில், விளக்கொளியுடன் பல்வேறு வடிவிலான விசித்திர கற்களைப் பார்க்கலாம்.
கற்காட்டு இயற்கைக் காட்சி மண்டலத்தின் வடபகுதியில், NAI GU என்னும் கற்காடு அமைக்கிறது. யீ இனத்தின் சானி மொழியில், NAI GU என்பது, பண்டைய மற்றும் கருமை என்ற பொருளாகும். NAI GU கற்காட்டு தரைக்கடியில் வியத்தகு குகை உள்ளது. ஆஸ்திரிலிய பயணி புலினா லொபேஸ் கூறியதாவது:

NAI GU கற்காட்டைப் பார்த்து வியப்படைந்தேன். இந்த கற்களின் வடிவம் மிகவும் அழகானவை என்றார் அவர்.
கற்காட்டிலுள்ள கல் சிகரங்களும் கற்தூண்களும், காலநிலை மாற்றத்தின் படி, வண்ணம் மாறி வருகின்றன. மழை பெய்யும் போது, வெள்ளை கற்காடு, உடனடியாக கருப்பு நிறமாக மாறுகிறது. மழை நின்ற பிறகு, இந்தக் கல் சிகரங்கள், கருப்பு நிறத்திலிருந்து, பல்வேறு வண்ணங்கள் சேர்ந்த நிறமாக மாறுகின்றன. கடைசியாக, வெள்ளை நிறமாக, அவை மாறுகின்றன. யுன்னானின் கற்காடு, உலகளவில், கற்காட்டு அருங்காட்சியகம் எனக் கூறலாம் என்று, உலக மரபுச் செல்வ நிபுணர் லியாங் யுங் நிங் கூறினார். அவர் கூறியதாவது:

உலகளவில் எந்த வகை கற்காட்டு வடிவமும், இங்கே காணப்படலாம். பெரிய கற்காடு, வாள் வடிவிலான கல் சிகரங்களை முக்கியமாகக் கொண்டது. மற்றொரு பகுதியில், பண்டைய TOWER என்ற வடிவிலான கல் சிகரங்களைக் காணலாம். தவிர, கருப்பு, மஞ்சள் முதலிய வண்ணமுடைய காளாண் வடிவிலான கல் சிகரங்கள் உள்ளன. வெளிநாட்டு நிபுணர் ஒருவரின் கூற்றின் படி, கற்காட்டில் பார்வையிடும் போது, கியூபா, ஸ்பெயின் ஆகிய நாடுகளி்ல பயணம் மேற்கொள்வதை போன்றுள்ளது. உலகின் அனைத்து கற்காடுகளும், இங்கே வந்து காட்சிக்கு வைக்கப்படுவதை போன்றுள்ளது. இது, கற்காட்டு அருங்காட்சியகம். மிகவும் அரிதானது என்றார் அவர்.
கற்காட்டின் ஈர்ப்பு ஆற்றல், தனிச்சிறப்பானது. ஒரே கல் சிகரத்தையும் ஒரே காட்சி இடத்தையும், வேறுபட்ட காலத்தில் அல்லது வேறுபட்ட காலநிலையில் ஏன் ஒரு நாளில் வேறுபட்ட நேரத்தில் கூட பார்த்தால், வேறுபட்ட காட்சிகள் காணப்படலாம். வேறுபட்ட உணர்வு ஏற்படலாம்.